கீழக்கரையில் “சாலை தெரு வெல்பர் அசோசியசன் ” உதவி மையம் உதயம்

77fff 7788 777

செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வாழ்ந்த ஊரில் பல் வேறு நல அமைப்புகள் பல நூறு நல திட்டங்களை செய்து வருவது அனைவரும் அறிந்ததே !
இதில் கீழக்கரை சாலை தெருவில் “சாலை தெரு வெல்பர் அசோசியசன் ” என்ற பெயரில் புதிதாய் உதயமாக உள்ளது.

87 உறுப்பினர்களை கொண்டு சிறிதாய் ஆரம்பிக்கப்பட உள்ள அசோசியசன் கூட்டம் நேற்று சாலை தெரு ஓடக்காரப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது, வழிநடத்துதல் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது.
இதில் கணவரை இழந்த விதவை தாய்மார்களுக்கு ₹ 450 / மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்குவது (
நடைமுறைபடுத்துதல் தொடக்கமாக 5 பேருக்கு கொடுக்கப்பட்டது )
வபாத்தானவர்களுக்கு மையத்து பொருட்கள் அனைத்தும் இலவசமாய் தருதல், சேர் வாங்குதல், மருத்துவ, கல்வி உதவிகள், வாரம் ஒருமுறை தெருக்களை சுத்தம் செய்தல் உட்பட பல்வேறு நலத்திட்டத்தை செயல் வடிவம் தர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *