வகுதை கரையினிலே.. பாகம்.7 .. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

மாயாகுளம் என்றால் புத்தர் அல்லது மாணிக்கவாசகர், தென்னந்தோப்புகள், பாட்டப்பனம், பதனீர், ஏர்வாடி, பள்ளுவா ஊரனி என எத்தனையோ நம் என்னத்தில் ஓடலாம் , இந்த ஊரை இன்புட்டாக காதில் கேட்ட மாத்திரத்தில், அவுட் புட்டாக என் மனதில் விரிவது, நீல இந்தோனோஷிய தொப்பியும், வெண்ணிற ஆடையும், தோளில் துண்டும் என கம்பீரமாக வரும், சமூக செம்மலும், புரவலருமான டாக்டர் செ.மு. ஹமீது அப்துல் காதர்.
டாக்டர் செ.மு. ஹமீது அப்துல் காதர்sm hameed

இன்றைய மாயாகுளத்தை நாடறிந்த கல்வி கேந்திரமாக உருவாக்கிய செ.மு. ஹமீது அப்துல் காதர் அவர்களை குறிப்பிட வேண்டியது காலத்தின் தேவை மற்றுமின்றி அவரின் கல்விச் சேவை பிரமிக்கத்தக்கது. கீழக்கரையை ஒட்டிய மாயாகுளம் கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்பே 1980 களில் முதல் தனியார் சுயநிதி தொழில் நுட்ப கல்லூரிகள் ஆரம்பித்து, தென்னிந்தியா முழுவது ஏராளமான பொறியாளர்கள் உருவாக காரணமானவர், சென்னையிலும், கீழக்கரையிலும், இராமநாதபுரத்திலும், பள்ளிகளும், கலைக் கல்லூரிகளும், மருத்துவ தொழில் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் என எல்லையில்லாமல் வளர்த்தெடுத்தவர்.

மாயாகுளம் ஜமீன் பாரம்பரிய பின்புலம் கொண்ட இவரின் தந்தையார் பெருந்தகை செ.மு. சதக்கு தம்பி அவர்கள் கீழக்கரை சேர்மனாக இருந்த காலமான 1950 களின் தொடக்கம் தொட்டு சமூக வளர்ச்சிக்கு ஆதாரமான கீழக்கரையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஏராளமான சொத்துக்களை அள்ளி வழங்கிய குடும்பத்தினர். கீழக்கரை குத்பா கமிட்டித் தலைவர், ஏர்வாடி தர்கா நிர்வாக சபை தலைவர் என உள்ளூர் அளவிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும், அகில இந்திய அளவில் பல்வேறு கல்வி கூட்டமைப்புகளின் நிர்வாகியாகவும் பல பொறுப்புகளை வகித்து வந்தவர். கீழக்கரை நகராட்சியின் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு நகராட்சிக்கு ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வழி நடத்தி வந்தவர்.

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிய உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் கல்வி என்பதற்கான கருத்துருக்கள் மாறியபோது, அதனை தொலை நோக்குடன் அணுகி, தரகும், ஊழலும் வழிந்தோடிய அரசியல் சூழலில், இலாவகமாய் நீந்தி, சமுதாய நலனையும், வட்டார தொழில் புரட்சியையும் அடிப்படையாய் கொண்டு வளர்ச்சியடையாத, வறட்சி மற்றும் பின் தங்கிய பகுதி என அறியப்பட்ட இராமநாதபுரம் பகுதியில், கீழக்கரையில் தொழில் நுட்பம் மற்றும் , பொறியியல் கல்லூரிகள் அமைத்து மாபெரும் விந்தை நிகழ்த்தியவர் செ.மு. ஹமீது காக்கா.

அரசியல், அதிகார, வர்த்தக மட்டத்தில் நிலவும் கடைந்ததெடுத்த கூறுகள் அறிந்து காலடி வைத்து, சாதகம் செய்வதில் ஹமீது காக்காவுக்கு நிகராக இந்த நூற்றாண்டில் கீழக்கரையில் எவரையும் ஒப்பிட முடியாது. கீழக்கரை பகுதியை மிகப்பெரும் தொழில் பிரதேசமாக உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அகில இந்திய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மாநாட்டினை 1990 ஆம் ஆண்டு கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடத்திக்காட்டி அம்பானி முதல் மாமன் மாப்பிள்ளை வரை மொத்த வர்த்தக ஜாம்பவான்களையும் கீழக்கரை நோக்கி திரும்ப வைத்த வித்தகர். அடுத்தடுத்து தமது அறக்கட்டளையின் தூன்களாக விளங்கிய தனது மூன்று சகோதரர்களையும் இழந்தாலும், தீரத்துடன் தன் கல்வி மற்றும் சமூகப் பணிகளை செ.மு. ஹமீது காக்கா தொடர்ந்து செய்து வந்து கொண்டே இருந்தார்கள்.

தனது மருத்துவ கல்லுரி கணவுக்கான அச்சானியாக கட்டப்பட்ட சென்னை மருத்துவமனை திறப்பு விழாவுக்காக அன்றைய துனை குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி, மற்றும் மத்திய சிறுபாண்மை துறை விவகார அமைச்சர் ரகுமான்கான் ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுத்து பின் சென்னை திரும்ப ஆயத்தமாகும் வேளையில் கடந்த 06.06.2013 அன்று மாரடைப்பு காரணமாக புது தில்லி ராம் லோகியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தனது 81 ஆவது வயதில் மாலை 6 மணியளவில் காலமானார். கீழக்கரை மக்களுக்கும், சமுதாயத்திற்கும் ஈடுகட்டமுடியாத பேரிழப்பாக அவரின் மறைவு இருந்தது. கீழக்கரைக்கும் அதன் சுற்று வட்டார பகுதியின் வளச்சிக்கும் தூனாய் இருந்து சேவைகள் செய்தவர் இல்லை என்ற நிகழ்வு ஒரு மாயையாக எனக்கு தோன்றியது.

தன் வாழ் நாள் காலம் முடிவடைவதற்குள் கீழக்கரை பகுதியில் மிகப்பெரும் தொழில் நுட்ப பூங்கா அமைவதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தார். அதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் 100 ஏக்கர் நிலத்தினை அரசுக்கு கையளிக்க முன் வந்தார். பல்வேறு காரணங்களினால் அது நிறைவேறா நிலையில் இருந்தது. டாக்டர் செ.மு. ஹமீது அப்துல் காதர் அவர்களின் கணவினை என்றாவது ஒரு நாள் ஈடேற செய்வது சமூக அக்கரை கொண்ட கீழக்கரை பெருந்தகைகளின் கடமையாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள்.⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *