வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

கடந்த வாரம்தான் ஏர்வாடி தர்காவில் ஆண்டு தோறும் நடைபெறும் கொடி இறக்கும் வைபவம் நடந்து முடிந்தது, ஏர்வாடி தர்காவை பொறுத்தவரை கொடி ஏற்றம் , கொடி இறக்கம், சந்தனக்கூடு (உருஸ்) ஆகிய மூன்று நாட்கள் வெகு விஷேசமான நாட்களாக கருதப்பட்டு கொண்டாடப்படும். ஆண்டுதோறும் இஸ்லாமிய காலண்டரில் 11 ஆவது மாதமான துல் கஹ்தா, பிறை 1 ஆம் நாள் ,யானைகள், குதிரைகள் ஊர்வலம் வர, ஹத்தார்கள் , லெவ்வைகள் புடை சூழ
ஏர்வாடி தர்காவில் பெரிய எஜமானாரான பாதுஷா நாயகத்தின் கால்மாட்டு பகுதியில் கொடியடியில், கொடிமரம் நடப்பட்டு முதலில் செம்பிறை கொடியும், பின் பச்சைப்பிறை கொடியும் ஏற்றப்படும். முதலில் ஏன் செங்கொடி ஏற்றப்படுகிறது? துருக்கியின் தேசியக்கொடி இன்றளவிலும் கூட செம்பிறை கொடிதான் என்பது நாம் அறிந்ததே…ervadi55

கி.பி. 1180 களில், துருக்கியை தலைமையிடமாக கொண்ட அய்யூபி சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் , சிலுவைப் போர் வீரர் சுல்தான் சலாஹுதீனின் ஆட்சிக்கு உட்பட்ட மதீனா நகரின் ஆளுனராக இருந்த பெருமானாரின் வழித்தோன்றலான ஏர்வாடி சுல்த்தான் செய்யது இப்ராஹீம் என்ற பாதுஷா நாயகம் தனது இரண்டாவது இந்தியப் பயணமாக மொத்த குடும்பத்துடன் கேரளாவின் கண்ணனூர் துறைமுகம் வழியாக, வைப்பாறு பகுதியை ஒட்டிய பவுத்திர மாணிக்கப்பட்டினம் என்ற கீழக்கரை புறக் கடற்பகுதி மனல் வெளிக்கு வந்து கூடாரம் அடித்து தங்கி இருந்தனர்.

துருக்கிய பேரரசர் சுல்தான் சலாஹுதீனின் அனுமதி பெற்று தனது அரசப் பதவியை துறந்து இஸ்லாத்தை போதிக்க தனது குடும்பத்தினர் உள்பட பரிவாரங்களுடன் வருகை தந்தவர்தான் குத்பு சுல்த்தான் செய்யது இப்ராஹீம் பாதுஷா நாயகம்.
துருக்கிய அய்யூபி பேரரசன் சுல்தான் சலாஹுதீனின் வீரம் உலகெங்கும் புகழ் வீசிய காலம், யூதர்களின் வசம் இருந்த ஜெருசலத்தை கைப்பற்றி, சிலுவைப்போருக்காக ஆள் அனுப்பிக்கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். கடந்த 2005 ஆம் ஆண்டு 130 மில்லியன் டாலர் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த தி கிங்டம் ஆப் ஹெவன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் சுல்த்தான் சலாஹுதீனின் கதாப்பாத்திரத்தையும், அவர் வாழ்க்கை நிகழ்வுகளையும் , போர் காட்சிகளையும் மிக தத்ரூபமாக சித்தரித்து சிலுவைப்போர் நடந்த 12 ஆம் நூற்றாண்டின் முற்றத்துக்கே படம் பார்க்கும் நம்மை அழைத்து சென்றிருப்பார்கள்…. .

சுல்த்தான் சலாஹுதீன் அவர்களின் அணுமதி பெற்று பாதுஷா நாயகம் இங்கு வந்த சமயம், பாண்டிய நாட்டை மூன்றாக
(மதுரை, இராமநாதபுரம், நெல்லை) பிரிந்து மன்னர்கள் ஆண்டு வந்தார்கள், மதுரையை தலை நகராக கொண்டு வட மதுரைப்பகுதியை பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியனும் நெல்லையை தலை நகராக கொண்டு விக்கிரமபாண்டியனின் மகன் முதலாம் சடைய வர்மன் குலசேகர பாண்டியனும் தென் மதுரைப் பகுதியான பவுத்திரமாணிக்கப்பட்டினைத்தை தலை நகராக கொண்டு விக்கிரமபாண்டியனும்,
ஆண்டு வந்தனர், சோழ மண்ணன் குலோத்துங்கணில் ஆளுகைக்கு உட்பட்ட பாண்டிய நாட்டில் திறை செலுத்தி ஆண்டுவந்த பாண்டிய மன்னர்களான வீரபாண்டியனுக்கும் , விக்கிரமபாண்டியனுக்கும் முழு பாண்டிய நாட்டையும் தான்தான் ஆளவேண்டும் ஆசை கொண்டு தங்களுக்குள் கடும் வண்மத்துடன் கைப்பற்ற தகுந்த சமயத்திற்கு காத்திருந்தனர். அந்த சமயம் பிறைக்கொடி ஏந்தி வந்த ஏர்வாடி பாதுஷா நாயகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்த மன்னன் குலசேகர பாண்டியன் தனது நாட்டுக்குள் அவர்களது சமயக் கொள்கைகளை பரப்ப அனுமதித்தார். அதற்கு பின்னால் அரசியலும் இருந்ததாகவும் அதுவே பாதுஷா நாயகம் தென் பாண்டி நாட்டை 12 ஆண்டுகாலம் ஆள்வதற்கு வழி வகுத்ததாகவும் தென்பாண்டி சீமையொலே நூலின் ஆசிரியர் கவிஞர் ச.சி.நெ. அப்துல் ரஷாக் தெளிவாக விளக்குகிறார்.ervaadi34

மதுரையை ஆண்ட பராக்கிரமபாண்டியனின் மகனான வீரபாண்டியனிடம் கொள்கைப்பிரச்சாரம் செய்ய சென்ற பாதுஷா நாயகத்தின் குழுவினரை அவமானல்படுத்தியதில் ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக எரிச்சலடைந்தான் வீரபாண்டியண், ஒருபுறம் சோழ மன்னர்களின் கட்டுப்பாடு மறுபுறம் செய்யது இப்ராஹீம் பாதுஷா குழுவினரின் போதனைகள், இன்னொரு புறம் பாதுஷாவை சூழ்ச்சி செய்து தனக்கு எதிராக திருப்பிய எதிரி குலசேகர் பாண்டியண் என்று பல வகையில் வீரபாண்டியன் சங்கடத்திற்குள்ளாகிறார். சோழநாட்டிற்கு சென்றது போக மீதமிருந்த படையுடன் பாண்டியன் பாதுஷா நாயகத்துடன் வந்தவர்களுடன் மோத சந்தர்ப்பவசத்தால் இஸ்லாமியப் படை வென்று மதுரை இஸ்லாமியர் படையின் கைவசம் வந்தது. வெற்றி அடைந்த செய்யது இப்ராஹீம் பாதுஷா , அவருடன் வந்த ஜித்தாவின் ஆளுனராக இருந்த சிக்கந்தர் பாதுஷாவை மதுரை சுல்தானாக்கிவிட்டு அவரது தளபதி அமீர் அப்பாஸூடன் இராமநாதபுரத்திலுள்ள பவுத்திர மாணிக்கப்பட்டினமான கீழக்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

மதுரைக் கோட்டையை அப்படியே விட்டு விட்டு சோழ நாடு நோக்கி ஓடிய வீரபாண்டியன் மாயமாகி மறைந்தார். சிக்கந்தர் பாதுஷாவை வட மதுரை பகுதிக்கு சோழப்பிரதினிதிகளின் ஒப்புதலுக்கினங்க அரசராக்கிவிட்டு தென்மதுரைக்கு வந்த பாதுஷா நாயகத்துடன் அடாவடியாக போர்தொடுத்தான் விக்கிரமபாண்டியன், இந்தப்போர் 10 கட்டமாக 30 நாட்கள் நடைபெற்றது, இந்த் உக்கிரப் போர் பெரும்பாலும் கடற்கரையோர மணல் வெளிகளில் நடைபெற்றதாக அறிய முடிகிறது, குறிப்பாக வாலி நோக்கம், ஏர்வாடி, ஏர்வாடி காட்டுப்பள்ளி கடலோரப்பகுதி, கீழக்கரை பாரதி நகர், செய்யதப்பா தர்கா காட்டுப்பள்ளி, சின்ன மாயாகுளம , பெரிய நெய்னார் அப்பா மனல் வெளி, கீழக்கரை முகம்மது காசீம் அப்பா தர்கா கடல் பகுதி, அலவாக்கரவாடி, செங்கழல் நீர் ஓடை , பக்கீரப்பா , வேதாளை, சுந்தரமடையான், கடல் பகுதிகளில் நடைபெற்றதாகவே உறுதிப்படுத்தப்படுகிறது, இந்தப்போரில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள், பாதுஷா நாயகத்தின் மகன் செய்யது அபுதாஹிர் உட்பட தளபதி அமீர் அப்பாஷ், செய்யது முகம்மது அப்பா, யாஸீன் என்ற சீனியப்பா, விக்ரமபாண்டியனிம் இளைய மகன் இந்திரப்பாண்டியன், விக்கிரமபாண்டியன் ஆகியோர் உக்கிரப்போரில் இறந்தபின் பவுத்திரமாணிக்கபட்டின கோட்டையை கைப்பற்றிய பாதுஷா நாயகம், வைப்பாறுக்கும் , வைகையாறுக்கும் இடைப்பட்ட ஒரு முக்கோன வடிவிலான, வாலி நோக்கம் முதல் பாம்பன் தீவு வரையிலும் உள்ள ஏர்வாடி,பெரியப்பட்டினம், சேதுகரை, வேதாளை, கீழக்கரை , மரைக்காயர்பட்டினம், சுந்தரமடையான் , ஆற்றங்கரை வரை உள்ளடக்கிய
தென்மதுரை பகுதியும் , சிக்கந்தர் பாதுஷா ஆண்ட மதுரை உள்ளடக்கிய பகுதியையும் தனது ஆளுகையின் வசம் கொண்டு வந்து 12 வருடங்கள் நல்லாட்சி புரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தப்போரில் வெட்டுப்பட்ட விக்ரமபாண்டியனின் மகன் குலசேகரபாண்டியன் தப்பித்து ஓடி மாயமாகினார்.

ervadi566
சுல்தான் அவர்களின் ஆட்சியில் அவரது தம்பியின் மகன் செய்யது இஷ்ஹாக்குக்கும் அவரின் தங்கையின் மகளுக்கும் நடந்த இராஜ திருமணம பாண்டிய நாட்டில் வியப்புடன் பேசப்பட்ட வைபோகமாக அமைந்தது, தென் மதுரை முதல் மாமதுரை வரை 60 மைல் தூரத்துக்கு விளக்குகள் வழி நெடுகிலும் அலங்கரிக்கப்பட்டு, மூன்று நாட்களும் முழு விருந்து அளிக்கப்பட்டு, சோழ , சேர மண்னர்கள் கலந்து கொளரவித்த வரலாற்று திருமண நிகழ்வாக அது அமைந்தது. இன்று கீழக்கரையில் நடைபெறும் தடபுடலான கல்யாணங்களுக்கும், சஹன் சாப்பாடுகளுக்கும் முன்னோடியாக அந்த திருமண விழா நடைபெற்றதாக எடுத்துக் கொள்ளலாம்.

1182லிருந்து சையது சிக்கந்தர் பாதுஷா மதுரையை ஆட்சி செய்கிறார். வீரபாண்டியன் திருப்பதிக்கு சென்று பெரும்படை திரட்டி வந்து மாயமான குலசேகரனுடன் சேர்ந்துகொண்டு சிக்கந்தருடன் போரிடுகிறார். சிக்கந்தர் பாதுஷா உதவி கேட்டு செய்யது இப்ராஹிமிடம் ஏழு பேரை பவுத்திரமாணிக்கப்பட்டினம் அனுப்புகிறார். பாண்டியர்கள் அவர்களை சிலைமான், சக்கிமங்கலம் கார்சேரியிலும் ,மற்றவர்களை மானாமதுரைக்கு -பார்த்திபனூர் சாலையில் கொல்கிறார்கள். சிக்கந்தர் சுல்தான் பாதுஷா திருப்பரங்குன்ற மலையில் தஞ்சமடைகிறார். வீரபாண்டியனும், குலசேகரபாண்டியனும் திருப்பரங்குன்ற மலையில் சிக்கந்தர் இருப்பதை அறிந்து மலைக்கு வந்து சிக்கந்தரின் ஆலோசகரான தர்வேஸையும், அவரது படைத்தலைவரான பாலமஸ்தானையும், மருத்துவரான ஹக்கீம் லுக்மானையும் கொல்கிறார்கள். (சிக்கந்தர் பாதுஷா இம்மலைக்கு குதிரையில் வந்த சென்றதாக நம்பிக்கையிருக்கிறது) மன்னரின் குதிரைகள் மலைமீதுள்ள குளமருகில் கட்டப்பட்டிருந்தது. மலைமீது வந்து இறைநேசரான சிக்கந்தரையும் கொல்கிறார்கள். அவரது நினைவிடத்தில் தான் இந்த தர்ஹா அமைந்துள்ளது.பின் கி.பி.1190 முதல் 1216 வரை குலசேகரன் மதுரையை ஆள்கிறார். குலசேகரனுக்கு மதுரையில் முட்டுக் கொடுத்து தென் மதுரையை கைப்பற்ற வந்த வீரபாண்டியன் போரில் பாதுஷா நாயகத்தை கொன்றுவிட்டு தானும் மடிகிறார். அதன் பின்னர் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு நாடுகள் , அதில் ஒரு பகுதியில் 5 தலைமுறைகளாக பாதுஷா நாயகத்தின் சந்ததிகள் ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிந்து வந்தனர்.- தொடரும்..⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *