வகுதை கரையினிலே .. பாகம் 9.. கீழக்கரை வரலாற்று ஆய்வு . எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

வகுதை கரையினிலே .. பாகம் 9.. கீழக்கரை வரலாற்று ஆய்வு . எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

கீழக்கரை குறித்து விளக்கப்படுவதாக கூறப்படும் பல்சந்த மாலை ஒரு வேளை பாக்தாத் நகரை மையப்படுத்தி எழுதப்பட்ட நூலாக இருக்கலாமோ? அது எப்படி ? 8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் , ஏகப்பட்ட சர்வதேச அறிஞர்களையும், பண்டிதர்களையும், பாக்தாத் நகருக்கு வரவழைத்துச் சிறப்பு செய்து , காலத்தால் அழியாத இலக்கியங்கள் பலவற்றை படைக்க ஊக்குவித்தர்தான் வச்சிரநாடு என்று அழைக்கப்பட்ட மெசபடோமியாவின் நிலப்பகுதியை ஆண்டு வந்த கலீபா ஹாரூன் அல் ரஷீத் .

அந்த காலக்கட்டத்தில் காப்பிய புலவர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் தென்னாட்டில் பரவி வாழ்ந்ததை வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது, கலீபா ஹாரூன் தனது அரச தொடர்புகள் மூலம் தமிழ் நாட்டிலிருந்த புலவர் பெருமான் எவரையேனும் அழைத்து வந்து பாக்தாத் நகரின் வாழ்வியல் இலக்கியத்தை படைக்கச்செய்ததால் வந்த நூலா இந்த பல்சந்தமாலை ? இருக்கலாம்..klk vara klk vara956

2000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தமிழ் புலவர் பெருமக்கள் பலர் வரலாற்று நவீனங்களை தாம் வாழும் சூழலுக்கும், தமது மொழிக்கும் ஏற்றார் போல அழகியல் கூறி புனைவதில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தனர் என்பதை அறிவோம். இந்த வரிசையில் 17 ஆம் நூற்றாண்டில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றினை உவமை கூறி தமிழில் புனைந்து சீறா புறானம் என்ற பெரும் இலக்கியம் தந்தவர் கீழக்கரை உமறுப்புலவர், ஹிஜ்ரத்து காண்டம், விலாதத்து காண்டம் உட்பட மூன்று காண்டங்களை மட்டுமே சீறாபுறானத்தில் தந்த உமறுப்புலவர், நபிகளாரின் வாழக்கை வரலாற்றினை ஏதோ ஒரு காரணத்தினால் முழுமையாக பதிவு செய்யவில்லை, பின்பு சீறா புரானத்தை முழுமைபடுத்த கீழக்கரையை சேர்ந்த பனீ அஹ்மது மரைக்காயர் என்ற புலவர் பெருமகன் சின்னச் சீறா என்ற காப்பியம் படைத்து அந்தக் குறையை நிவர்த்தி செய்தார்.

நபி அவதார அம்மாணை என்ற காப்பியம் தந்தவர் உமறுப்புலவரின் மகன் கவிக் களஞ்சியப் புலவர் , அது போல சுலைமான் நபி வரலாற்றினை இராஜ நாயகம் என்ற நூலாகவும் மற்றும் ஏர்வாடி பாதுஷா நாயகம் கதையினை தீன் விளக்கம் என்ற நூலாகவும் படைத்த வண்ணக் களஞ்சியப் புலவர் எழுதியது போல, அதன் முன்னோடியாக அரேபிய கலீபா ஹாரூனின் சிறப்பை உவமையுடன் விளக்க தமிழில் பல்சந்தமாலை படைக்கப்பட்டிருக்கலாம்.

களஞ்சியம் என்றால் என்ன தோன்றுகிறது ? பொதுவாகவே தாணியங்களை சேமித்து வைக்கப்படும் இடங்களை களஞ்சியம் என்று கூறுவோம், களஞ்சியம் என்ற பெயரில் திரைப்பட இயக்குனர் ஒருவர் இருந்து பின்பு ஏடாகூடமாக சிக்கலில் மாட்டி கொண்ட செய்திகளை பார்த்திருப்போம். இங்கே கடந்த காலங்களில் சுடர்மிகுந்த அறிவுக்களஞ்சியமாக நடமாடி, கவிதைகளும், மாலைகளும் பல படைத்த புலவர் பெருமக்கள் பலர் தனது பெயரோடு களஞ்சியம் என்று குறிப்பிட்டு அழைக்கபட்டிருக்கிறார்கள்.klk vara9566

கீழக்கரை தெற்குத்தெருவில் இன்றும் செல்வாக்குடன் வசித்து வரும் பாரம்பரியமிக்க களஞ்சியம் குடும்பத்தினர் உமருப்புலவரின் மகன் கவிக்களஞ்சியப் புலவரின் சந்ததிகள் என்பதாக வரலாறுகள் மூலம் அறியமுடிகிறது. சமூக அக்கறையும் ஆர்வமும் கொண்ட கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவர் ஹாஜி பி.எல்.இ. முஹம்மது அப்துல் காதர் களஞ்சியம். தயாளகுணமும், நற்சிந்தனையும் கொண்ட இவர் கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மாலின் நிறுவன நிர்வாகிகளில் ஒருவராகவும், தெற்குத்தெரு ஜமாஅத்தின் தலைவராகவும், குத்பா கமிட்டியின் நிர்வாகியாகவும் பல காலம் இருந்து மார்க்க சேவை மற்றும் பொது நலப்பனியிலும் தம்மை ஈடுபடுத்திகொண்டவர். சீரிய சேவைகளின் வாயிலாக பி.எல்.இ. முஹம்மது அப்துல் காதர் களஞ்சியம் அவர்கள் தமது முன்னோர்களின் புகழை பறைசாற்றினார் என்றால் மிகையில்லை. பி.எல். இ. என்ற அவர்களின் முகவரி புலவர் இப்ராஹீம் ( புல. இப்ராஹீம் – P.L.E) என்ற களஞ்சியம் குடும்ப முன்னோடி ஒருவரின் பெயர் சுருக்கம்தான் என அந்த குடும்பத்தை சேர்ந்த மூத்தவர் பி.எல்.இ. காதர் முகைதீன் களஞ்சியம் தெரிவித்ததாக தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. அதே போல தீன் விளக்கம் எழுதிய மீசல் வண்ணக்களஞ்சிய புலவரின் சந்ததிகள் களஞ்சியம் என்ற குடும்பப் பெயருடன் சித்தார் கோட்டையில் வாழ்ந்து வருவதாக செய்திகள் இருக்கிறது.⁠⁠⁠⁠

மீண்டும் பல்சந்தமாலைக்கு வருவோம், முன்பு சொன்னது போல, இந்த நூல் பாக்தாத்தில் படைக்கப்பட்டிருந்தால் கலீபாவின் ஆட்சியில் பைத்துல் ஹிக்மா என்ற அறிவகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கலாம். பல்சந்த மாலையில் கீழ்காணும் பாடல்கள் அந்த சூழலில், பாக்தாத் நகரில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியமாகவோ அல்லது அரபி, பார்சியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆக்கமாகவோ நினைக்கத் தோன்றுவதின் நிலையை சற்றே நெருங்குவதை காணலாம்:

கலைமதி வாய்மைக் கலுபா வழிவரும் கற்பமைந்த
தலைமைய ரேழ்பெருந் தரங்கமும் பெற்ற நந்தகைசால்
மலையென மாமதில் வச்சிரநாடன்….

என்றஇந்த பாடலின் விளக்கம் என்னவென்றால்…

கலைகள், அறிவு மற்றும் நீதி என எல்லா அறங்களிலும் சிறப்புவாய்ந்த கலீபாவின் வழிவந்தவர்களின் தலைமையில், ஏழு பெரும் நகரங்களை பெற்ற மலைபோல் கோட்டை அரண்களை கொண்டிருந்த வச்சிர நாட்டினர்…
இன்னொரு பாடல் இப்படி அமைகிறது….

வில்லார் நுதலியும் நீயும் இன்றே சென்று மேவுதிர்சூது
எல்லாம் உணர்ந்தவர் ஏழ்பெருந்தரங்கத்து யவனர்கள்
“அல்லா” என வந்து சாற்றியும் நாதரைக் கைதொழும்சீர்…

இதற்கான விளக்கம் என்னவெனில்…

எல்லா அறங்களும் அறிந்த ஏழு பெரும்நகர்கள் கொண்ட யவனர்களாகிய, அல்லா என்ற இறைவனை தொழும் இஸ்லாமியர்கள் வாழும் வகுதை நகருக்கு வில் போன்ற நெற்றியை கொண்ட உனது காதலியுடன் இன்றே நீ செல்…..

ஆக வச்சிர நாடு, வகுதாபுரி, ஏழ்பெரும்தரங்கத்தார், யவனர், அஞ்சுவன்னத்தார், அல்லா வை தொழுபவர்கள், கலீபா, என்ற வார்த்தைகள் பல்சந்தமாலையில் இடம் பெறுவதை காண முடிகிறது. 8 ஆம் நூற்றாண்டில் பாக்தாதை வகுதாபுரி என்று தமிழர்கள் அழைத்திருக்கிறார்கள். பாக்தாத் இருக்கும் நிலப்பகுதியான மெஸப்பொட்டாமியாவை தமிழர்கள் வச்சிரநாடு என்றும் அழைத்திருக்கிறார்கள் , அன்று, பாக்தாத்,கெய்ரோ, டமாஸ்கஸ், கூபா, ரக்கா, சமாரா, அப்பாஸித் சமாரா ஆகிய ஏழு பெரும் நகரங்களை உள்ளடக்கிய அப்பாசிய பேரரசின் கலீபாவான ஹாருன் அல் ரஷீதை கலுழ்பா என்றும் கலுபா அல்லது கலுபதி என்றும், பாக்தாத் நகரின் சிறப்பை வர்ணித்தும் பல்சந்த மாலையின் ஆசிரியர் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்.klk vara966

தமிழில் எழுதப்பட்ட இந்த நூல் பாக்தாத்தில் அறிவகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம். பின் 12 ஆம் நூற்றாண்டில் அப்பாசிய பேரரசின் 37 வது இறுதி கலீபாவான அல் முத்தஷிம் உடன் உக்கிரத்துடன் போர்தொடுத்து, பெருமானாரின் வம்சவழிவந்த அவரின் குருதி நிலத்தில் சிந்தினால் சாபம் எனக்கருதி , ஒரு சாக்கில் சுற்றி குதிரைகளை ஏற்றி அவரை கொன்று, நாடு பிடித்த , மங்கோலியப் பேரரசனும் செங்கிஸ்கானின் வாரிசுமான ஹுலாகுகானின் கொடுங்கோன்மையால் சூறையாடாப்பட்ட, செங்குருதி ஆறு ஓடிய, தரைமட்டமாக்கப்பட்ட பாக்தாத் நகரின் மையத்தில் அமைந்திருந்த தீக்கிரையாக்கப்பட்ட பைத்துல் ஹிக்மா அறிவகத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான நூலகளில் ஒன்றாக கூட இந்த பல் சந்தமாலை இருந்திருக்கலாம். அதுவே அந்த நூலின் முழுப்படியும் நமக்கு கிடைக்காமல் போயிருக்க காரணமாக இருந்திருக்கலாம், எரிக்கப்பட்ட நூல்களின் எச்சங்கள் தப்பித்த சிலரால் கெய்ரோவுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டதில் இந்த பல்சந்தமாலையின் 8 கண்னிகளும் கூட தப்பித்து நமது முண்ணோர்கள் வசம் கிடைத்திருக்கலாம்… எதையும் நம்மால் உறுதி செய்யக்கூடிய நிலை நிச்சயமாக இல்லை என்பதே நிதர்சனம். இருப்பினும் வகுதாபுரி கீழ்க்கரைதான் என்ற எனது நம்பிக்கை ஒளி பிரகாசமாய் ஒளிர்ந்து மாற்றுக் கோணங்கள் துளிர் விடுகிறது — ஆய்வுகள் தொடர்கிறது….⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *