வபாத் அறிவிப்பு (காலமானார்).. கீழக்கரை ஏ கே எஸ்

 


7th-ward-saraamma sarama

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த ஏ கே எஸ்  சாரா உம்மாள் இன்று  வபாத்தானார் (காலமானார்)

ஜனாப்.சுல்பிகார் ஹசன் மற்றும் ஜனாப். இப்திகார் ஹுசைன் ஆகியோரின் தாயாராவார்

வரலாற்று சிறப்புமிக்க கீழக்கரையில் 1953 ஆம் வருடம் பிரபல சமூக ஆர்வலரான A.K.S. கபீர் மற்றும் ஆபிதா அவர்களுக்கு மகளாய் பிறந்தவர் சித்தி சாரா உம்மாள்.

இவரது கணவர் சீனி நெய்னா முஹம்மது . இவரது தகப்பனார் A.K.S. கபீர் அவர்களைப் போலவே சமூக நலனில் ஆர்வம் கொண்டு கடந்த 35 வருடத்திற்கு முன்பாகவே பெண்களுக்கு என்று பிரத்யேகமான தனி மதராஸாவை துவக்கினார். மேலும் கீழக்கரையில் பல்வேறு மதராஸா துவக்க காரணமாக இருந்தார். பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க பெண்களுக்கென சிறு தொழில் பாட வகுப்புகளை நடத்தி வந்தார். இதன் ஒரு அங்கமாக 1995 ஆம் ஆண்டு பெண்களுக்காக பெண்களை நடத்தும் ஒரு பல்பொருள் அங்காடியே பழைய குத்பா பள்ளி அருகில் தொடங்கினார். இதன் தொடக்கமாக பல்வேறு பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாகினர். இவரின் இந்த முயற்சியைப் பாராட்டி 2004 ஆம் ஆண்டு சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதை வழங்கி கௌரவித்தது.

கீழக்கரை அனைத்து பெண்கள் மதராஸா தலைவர் பெண்கள் கூட்டமைப்பு தலைவர் என பல்வேறு பதவிகளையும் வகித்து உள்ளார். 1996 ஆம் ஆண்டு உலக் கோடிஸ்வரர்களில் ஒருவரான சீதக்காதி அறக்கட்டளை நிறுவனரான B.S.A. அப்துர் ரஹ்மான் அவர்கள் பேருராட்சி தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார் அதைபோல் 2001 ஆம் ஆண்டும் கேட்டார் இவர்களுக்கு விருப்பமில்லை என்பதால் போட்டியிடவில்லை.

2011 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சியினரும் சென்று தங்கள் கட்சியில் போட்டியிடுமாறு கூறினர். கடந்த 2016 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார் அரசாங்கத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் போட்டியிட இயலவில்லை.

இவர் மிகச் சிறந்த எழுத்தாளரும் ஆவார் இஸ்ஸாத்தில் பெண்கள் என்று ஒரு புத்தகத்தை எழுதியும் வெளியிட்டுள்ளார். மேலும் இவரது சேவைகள் எண்ணிலடாங்கது. மேலும் இவர் பல்வேறு பெண்களுக்கான கருத்தரங்குகளையும் தன்னம்பிக்கை சார்ந்த வகுப்புகளையும் பல்வேறு இடங்களுக்கு சென்று நடத்தியுள்ளார். இவர் சிறந்த தன்னம்பிக்கை பயிற்சியாளராகவும் திகழ்ந்தார்.சிறந்த இயற்கை ஆர்வலரும் ஆவார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *