வபாத் அறிவிப்பு ( காலமானார் )…

sikkan
வபாத் அறிவிப்பு ( காலமானார் )…
தமிழக மஸ்ஜித் கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி. எம்.முஹம்மது சிக்கந்தர் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் மாரடைப்பால் மறைந்தார். அவருக்கு வயது 64.
தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர், சென்னை புரசைவாக்கம் ஜூம்மா பள்ளியின் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் முஹம்மது சிக்கந்தர். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்த பண்பாளர்.

மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்த போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் உணவின்றி பசியில் தவித்தபோது உணவளித்த பண்பாளர். மழை வெள்ள நிவாரண முகாம்களில் உதவிக்கரம் நீட்டி பல்வேறு பணிகளைச் செய்தவர். பள்ளிவாசலின் கதவு அனைவருக்கும் திறக்கும் என்று கூறி சென்னை முழுவதும் பள்ளிவாசலில் மதம் பாராமல் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்தவர்.

நிவாரண முகாமுக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு மட்டுமில்லாமல், பங்கேற்ற அனைவருக்கும் நிலவேம்பு கசாயமும், மிளகு வெற்றிலையை உள்ளிட்ட மருந்துகளை இலவசமாக வழங்கினார். அதுமட்டுமின்றி மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வசிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சேலை, சட்டை, பெட்ஷீட், லுங்கி, பால், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை தமிழக மஸ்ஜித் கூட்டமைப்பின் மூலம் வழங்கி மனிதம் வளர்த்தார்.

பல்வேறு கல்வி உதவிகளை வழங்கி வந்த முஹம்மது சிக்கந்தர் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் மாரடைப்பால் மறைந்தார். புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் புரசைவாக்கம் தானா தெரு மையவாடியில் நல்லடக்கம் நடைபெற்றது.

சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர்,
தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.
தலைவர், இஸ்லாமிய இலக்கியக் கழகம். வெளியிட்டுள்ள செய்தியில்..

சமுதாயச் சேவையில் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு வேகத்தோடும் விவேகத்தோடும் எண்ணற்ற அரிய பணிகளாற்றி
வந்த செயல் வீரரின் மறைவு தாங்கொணாத் துயரைத் தருகின்றது…. தொண்டு இயக்கப்
நோக்கங்களையும் பணிகளையும் திறம்படச் செயல்படுத்தி வந்த அன்புச் சகோதரரின் இழப்பு பெரும் வேதனையை நிறைக்கிறது….
வல்ல அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் உயரிய சுவனம் நல்க இருகரமேந்தித்
துஆ செய்கிறோம்…. என தெரிவித்துள்ளார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *