transasia1

53 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்தது! 12 பயணிகள் பலி!!

tansasiaplaneதைவானில் 53 பேருடன் சென்ற பயணிகள் விமானம் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மீட்புப் பணி துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது.

தைவானில் தலைநகர் தைபே விமான நிலையத்திலிருந்து இன்று காலை 53 பேருடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா பயணிகள் விமானம், கின்மென் தீவைத் தாண்டி செல்லும்போது பாலம் மீது மோதி விபத்துக்குள்ளாகி கீலுங் என்ற ஆற்றில் விழுந்தது.

சரியாக 10.55 மணிக்கு விமானத்துடன் தகவல் தொடர்பு இல்லாமல் சென்றதை அடுத்து விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா மூலம் கிடைத்த தகவலோடு உடனடியாக மீட்புப் பணியினர் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்படி விமானத்தின் பாதி பாகம், கீலுங் ஆற்றில் மூழ்கியுள்ளது.

தற்போதைய நிலையில் 12 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன, ஆற்றில் விழுந்த விமானத்தில் சிக்கியுள்ள மற்ற பயணிகளின் நிலை தெரியவில்லை. ஆனால் அதில் 10 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தைவான் உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

transasia1

transasia2

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *