tntj9

ததஜ சார்பில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் பிரம்மாண்ட பொது கூட்டம்

tntj004

tntj9

tntj0043

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் பெருமளவில் இஸ்லாமிய பெண்கள் உள்ப ட பெரும் மக்கள் திரள் பங்கேற்ற பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற்றது .

பொது சிவில் சட்டத்திற்க்கு எதிராக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொது கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி ,அமைப்பாளர் பி ஜெய்னுலாப்தீன் முன்னிலையில் நடைபெற்றது

சாரை சாரையாக தமிழகம் முழுவதுமிருந்து மக்கள் வந்து கொண்டேயிருந்தனர்இந்த கூட்டத்தில், பெரும் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர். அப்பகுதி முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தனர்

கூட்டத்தில் ஷரியத் சட்டமே இஸ்லாமிய பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும், பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமிய பெண்களின் உரிமையை பறிக்கும் சட்டம் எனவும், கோஷங்களை எழுப்பினர். மேலும் பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு சாத்தியமற்றது எனவும், பலதார மணத்தை சட்டப்பூர்வமாக ஆக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *