கீழக்கரையில் மதுபான கடைகளை அகற்ற போராட்டம்! நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

கீழக்கரையில் செயல்படும் 2 டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோவில்,தேவாலயம், பள்ளிகள்,அரசு மருத்துவமனைகள் உள்ள பகுதியில் இந்த மதுபான கடைகள் செயல்படுகிறது. இந்நிலையில் இரண்டு கடைகளையும் முற்றுகையிடபோவதாக நான்கு மாதத்திற்கு முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கபட்டது அதனையோட்டி கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கீழக்கரை தாசில்தார் இளங்கோவன், மதுவிலக்கு ஆயத்தீர்வை உதவி ஆணையர் அமிர்தலிங்கம், டாஸ்மாக் மேலாளர் வடமலை முத்து, கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்தையின் இறுதியில் நான்கு மாத காலத்திற்குள் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற உரிய வகையில் பரிசீலக்கப்படும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

இந்நிலையில் நான்கு மாதங்கள் கடந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படததால் விரைவில் பெரும் போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து நாம் தமிழர் கட்சி கீழக்கரை நகர் செயலாளர் பிரபாகரன் கூறுகையில்,

praba
ஆனால் நான்கு மாதங்களை கடந்தும் கடைகளை அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளிடத்தில் கேட்டபோது.முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கிற்கு நாம் தமிழர் கட்சி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *