திமுக ஆட்சி வந்தவுடன் வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம் செயல்படுத்தப்படும். ஷார்ஜா விழாவில் முக ஸ்டாலின் உறுதி துபாய் ; சார்ஜா

hame4443 hamee33 hamee0333 hamee933 hamee9554 hameee33நகரத்தில் ஆண்டுதோறும் சர்வதேச புத்தகதிருவிழா நடைபெறும் இவ்வருடம் வழக்கமான சிறப்பான ஏற்பாடுகளுடன் துவங்கியது . தமிழகத்திலிருந்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கமல் ஹாசன்,வைரமுத்து உள்ளிட்ட பலர் கடந்த ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இவ்வருடம் தமிழகத்திலிருந்து சார்ஜா அரசின் சிறப்பு விருந்தினராக எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றார். தமிழர்கள் சார்பில் கெண்டை மேளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பின் போது வரவேற்பு நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் மீரான், ஹமீதுரஹ்மான், முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி அய்மான் சங்க செயலாளர் ஹமீது, அல்லா பக்ஸ் , தொழிலதிபர் நோபல் மெரைன் சாஹுல் ஹமீது, , தொழிலதிபர் அன்வர், ஜெசிலா ரியாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

ஷார்ஜா புத்தக கண்காட்சி வருகை தந்த ஸ்டாலின் ஷார்ஜா புத்தக ஆணைக்குழுவுக்கு 1,000 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்

திராவிட இயக்கமும் புத்தகமும் உடலும் உயிரும் போன்றது. ஷார்ஜா மன்னர் தமிழர்களுக்கு நெருக்கமானவர் அவருக்கு மலையாளம் தெரியும் திராவிட மொழிகளில் மூத்த மொழியான தமிழோடு மலையாளமும் திராவிட மொழிகளின் ஒன்று எனவேதான் நமக்கு நெருக்கமானவர் என்கிறேன்

குறிப்பாக தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என முதன் முதலில் குரல் எழுப்பிய பெருமை காயிதேமில்லத்தையே சாரும் . ஒரு மனிதனுக்கு உணவு உடை இருப்பிடம் எவ்வளவு அவசியமோ அது போன்று புத்தகமும் அவசியமாகும்

அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் ஷார்ஜா சுல்தான் போற்றுதலுக்குரியவர். பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவக்கியது 1949-ம் ஆண்டுதான் என்றாலும், 1948-ம் ஆண்டே ‘வீட்டுக்கோர் புத்தகச்சாலை அமைப்போம்’ என்ற பிரசாரத்தைத் தொடங்கினார்.

உலக அளவில் நான்காவது மிகப்பெரிய புத்தகத் திருவிழாவாக விளங்கிய ஷார்ஜா புத்தகத் திருவிழா, ஒரே வருடத்தில் மூன்றாவது பெரிய புத்தகத் திருவிழாவாக இவ்வருடம் இடம் பிடித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

கடந்த தி.மு.க ஆட்சியின்போது வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக ‘வெளிநாடுவாழ் தமிழர்கள் வாரியம்’ ஒன்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது நிச்சயம் கழக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும். அப்படி அமைக்கப்படும் வாரியத்தில் யுஏஇல் உங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி இருப்பார் என்கிற உறுதியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

நிகழ்ச்சியில் அன்பில் பொய்யாமொழி எம் எல் ஏ , ஒருங்கினைப்பாளர் மீரான்,ஹமீதுரஹ்மான்,முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *