எஸ் எஸ் எல் சி தேர்வு முடிவு ! கீழக்கரை பள்ளிகள் விபரம்.. கீழக்கரை மாணவி அபிராமி 490/500

10வது தேர்வு முடிவு ! கீழக்கரை பள்ளிகள் விபரம்.. கீழக்கரை மாணவி அபிராமி 490/500
10ம் வகுப்பு பொது தேர்வில் கீழக்கரை நகரில் ஹமீதியா பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி அபிராமி 490 /500 மதிபெண்கள் பெற்று அபாரம்

இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சீனி சேகு மரைக்கா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் அடுத்ததாக‌ அல்சுமையா 487/500 மற்றும் ரிபாத் ஹசினா 487/500  என மதிப்பெண்கள் பெற்றனர் அடுத்ததாக மாணவி மரியம் மஹ்மூத் பாத்திமா 486/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்

மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி மாணவி செய்யது ராபியா உம்மாள் 467 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஜெய்னம்பு பீவி 462 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், ஹலிமத்து நதிரா 461 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முகைதீனியா மேல்நிலைப்பள்ளி மாணவி பாத்திமா பஹ்மினா 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஆமினத்து பர்வினா 431 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், அஸ்பரா சாகின் மற்றும் முகைதீன் கருணை ஆகிய இருவரும் 401 மதிப்பெண்கள் பெற்று முன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹமீதியா பெண்கள் உயர்நிலைப்பள்ளி பத்தையா பேகம் 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தையும், மதினா 483 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முகமது ஜய்னா 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மீனா தர்சினி 481 மதிப்பெண்கள் பெற்று இரண்டவது இடத்தையும், ஆமினத்து நிஸ்பா 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ராஜ ரினீத் 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மனோ 460 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், பிரேம் குமார் 450 மதிப்பெண்கள் பெற்று முன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி மாணவர் முகமது ஷபின் 459 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவர் விக்னேஷ்வரன் 452 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், முகமது கிஷான் 451 மதிப்பெண்கள் பெற்று முன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பியர்ல் மெட்ரிக் பள்ளியில் மாணவி சுமையா ஜகுபர் 473/500 பெற்று முதலிடத்தை பெற்றார். இப்பள்ளி மாணக்கர்கள் முதல்முறையாக பொதுதேர்வில் பங்கேற்றுள்ளனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *