விவசாயத்திற்கு இடையூறாக உள்ள பூச்சிகளை கட்டுபடுத்த மானிய விலையில் சோலார் விளக்கு பொறிகள்

Solar Light
திருப்புல்லாணி வட்டார வேளாண்மைத்துறையின் சார்பில்பொக்கனாரேந்தல், கொம்பூதி ஆகிய கிராமங்களில் நெற்பயிருக்கு தீமை செய்யும் பூச்சிகளை கவரும் சோலார் விளக்கு பொறிகள்மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குநர் அழகேசன் கூறியதாவது; நெல், மிளகாய், சிறு, குறுதானியங்கள் பயறு வகைகளில் பூச்சித்தாக்குதலுக்கு ஆளாகும் பயிர்களை கட்டுப்படுத்த சோலார் மூலம் மின்விளக்கு பொருத்தப்படுகிறது. மாலை 6 முதல் இரவு 10 மணிவரை தீமை செய்யும் பூச்சிகள் வெளிச்சத்தால் கவரப்பட்டு, குடுவையில் உள்ள தண்ணீர், மண்ணெண்ணையில் விழுந்து மடிகிறது. நள்ளிரவு முதல் மாலை வரை உள்ள நன்மை செய்யும் பூச்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. பூச்சிக்கொல்லி இடத்தேவையில்லை. கூலியாட்கள் மிச்சமாகும். 4 ஆயிரத்து 480க்கு வழங்கிய பின்னர் ரூ.4 ஆயிரம் மானியம் அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார். வேளாண்மை அலுவலர் உலகு சுந்தரம், தொழில்நுட்ப மேலாளர் முனியசாமி, உதவி வல்லுநர் விஜயகுமார் உட்பட ஏராளமான விவசாயிகள் உடனிருந்தனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *