jahangeer

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்க: இந்தியன் சோஷியல் ஃபோரம் கோரிக்கை!

இந்தியா முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதிகளாகவும்,தண்டனை கைதிகளாகவும் இருப்பவர்களை அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் விடுதலை செய்யவேண்டுமென இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி அனைத்து மாநில அரசுகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

இந்தியாவில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே தமது இளமையை கழித்து குடும்பத்தை பிரிந்து பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகி எதிர்காலம் குறித்த கவலையில் வாடிக்கொண்டிருக்கும் சிறைக்கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் விடுதலை வழங்கிட அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும்.

ஏற்கனவே இதற்கு அழகிய முன்மாதிரியாக கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை இந்தியன் சோஷியல் ஃபோரம் முழுமனதோடு நன்றியுடன் வரவேற்கிறது.

எதிர்வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தமிழக அரசு இந்த ஆண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகளை ஜாதி,மத வேறுபாடின்றி மனிதாபிமானத்துடன் விடுதலை செய்து பேரறிஞர் அண்ணாவின் மனித நேயத்திற்கு வலுவூட்டிட வேண்டுமாய் பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் சார்பிலும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் சார்பிலும் கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு கீழை ஜஹாங்கீர் அரூஸி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *