சிங்கப்பூரில் கல்வியில் சாதனை படைக்கும் தன்னம்பிக்கை கீழக்கரை மாணவர் …

சிங்கப்பூரில் சாதனை படைக்கும்  தன்னம்பிக்கை கீழக்கரை மாணவர் …

கீழக்கரை லெப்பை தெருவை சேர்ந்த முஹம்மது அபுல் காசிம்(நவாஸ்) மகனும், நைஸ் அப்பாவின் பேரனுமாகிய முஹம்மது நிஹால் சிங்கப்பூர் புகித் மேரா பள்ளியில் ‘0 லெவெல்/ தேர்வில் 83.4 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்

இம்மாணவருக்கு சிறு வயதில் இருந்து இரு காதுகளிலும் கேட்கும் திறனில் பாதிப்பு இருந்துள்ளது. இதனை புறந்தள்ளி தனது முயற்சியினால் கல்வியில் சிறந்து விளங்குகிறார். இவரின் திறமையை அங்கீகரித்து Resilient Achievers award என்ற விருதை பள்ளி வழங்கி கெளரவப்படுத்தியது.nihaal

இவ்விருது வாழ்வில் தடைகளை உடைத்து வெற்றியடைபவர்களுக்கு வழங்கும் விருதாகும்..

தற்போது இவர் உயர் கல்விக்காக சிங்கப்பூரில் உள்ள பாலிடெக்னிக்கில் சேர்ந்துள்ளார்

இது குறித்து மாணவர் நிஹால் கூறுகையில்….

காதில் குறைபாடு இருப்பதினால் எனக்கு தொடக்கத்தில் பள்ளிக்கு செல்வதில் தயக்கம் இருந்தது .சிலர் கேலி செய்தார்கள் ஆனாலும் என் நண்பர்கள் பலர் எனக்கு துணை நின்றார்கள்
சில சமயம் காதுக்கான கருவி பழுதடைந்தாலும் நண்பர்கள் பாடங்களை எழுதி தருவார்கள்

pho

இதில் எனக்கு எப்போழுதும் உறுதுணையாக இருந்தவர் பள்ளியின் ஆசிரியை பெய்த் நிக் அவர்கள் தான்.. இது போன்று குறைபாடுகளுக்காக நாம் கவலை பட தேவையில்லை நம்மை போன்றவர்களுக்கு நணபர்களின் உதவி என்று இருக்கு என்றார்
இவரை பள்ளி ஆசிரியை கூறுகையில்..
எனக்கு அவருக்கு காது கோளாறு இருப்பது எனக்கு தெரியும்  ஆனால் அவர் என்னிடம் சொன்னதில்லை.. இன்று அவரின் வளர்ச்சி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

மனம் ஆரோக்கியமாகவும்,உற்சாகமாகவும்,தன்னம்பிக்கையுடன் இருந்தால்  வெற்றி பெறலாம் என்பதை தனது செயல்பாடுகளால் உணர்த்தியுள்ளார் பாராட்டுக்குறிய மாணவர் நிஹால்

 

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *