சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் முக ஸ்டாலின் நவம் 3ந்தேதி பங்கேற்பு

stall444சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் முக ஸ்டாலின் நவம் 3ந்தேதி பங்கேற்பு
சார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியில் ஷார்ஜா அரசு சிறப்பு விருந்தினராக மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் தொடர்ந்து 36 வருடங்களாக மிகப்பெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

அதில் உலகம் முழுவதுமிருந்து அரசியல் தலைவர்கள், அனைத்து மொழிகளைச் சார்ந்த , எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஷார்ஜா அரசின் விருந்தினர்களாகக் கலந்து கொள்வர்.
உலக அளவில் மிகவும் போற்றப்பட்ட சேவைகள் செய்து, விலைமதிப்பில்லா சமூக-கலாச்சார மேம்பாட்டிற்கு மிகப்பெரும் பங்காற்றியவர் என்ற அடிப்படையில் , தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் இவ்வருட சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு ஷார்ஜா அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இவ்வழைப்பினை மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட தளபதி அவர்கள், நவம்பர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி சிறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் தளபதியாரை அமீரகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக வரவேற்கும் ஏற்பாடுகள் பற்றியும், தளபதி பங்கு பெறும் இவ்விழாவில் தமிழர்கள் அனைவரையும் பங்கு பெறச் செய்து இப்புத்தக விழாவை தமிழர்கள் திருவிழாவாக விமரிசையாக நடத்துவது பற்றியும்

அமீரகம் வாழ் அனைத்து தமிழர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் 28-10-2017 அன்று துபை தேரா ரமதா ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கான ஒருங்கிணைப்பை அரிகேசவநல்லூர் S.S.மீரான் செய்திருந்தார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *