சீதக்காதி சினிமா பட குழுவினருக்கு கீழக்கரை சமூக நல அமைப்பு வேண்டுகோள்

‘சீதக்காதி’ பட குழுவினருக்கு கீழக்கரை சமூக நல அமைப்பு வேண்டுகோள்

SeethaKaathi-10
நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் 25 வது படமான சீதக்காதி பட தொடக்க நிகழ்ச்சி

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான முஹைதீன் இப்ராஹிம் வெளிட்டுள்ள செய்தியில்……Mohaideen Ibrahim

செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி . வரையாது வழங்கிய பெருவள்ளல். ஈந்து சிவந்த கரங்களுக்கு சொந்தமானவர். கார் தட்டிய காலத்தே மார்தட்டி வழங்கிய மால் சீதக்காதி. சேது நாட்டு செந்தமிழ் வள்ளல் என்று இலக்கிய பெருமக்களாலும், புலவர்களாலும் ஒருங்கே புகழப்பட்டு , ஈந்து அறவாழ்வு வாழ்ந்து , சேது நாட்டு அரசியலில் பெரும் பங்காற்றி, மக்கள் சேவையில் தன் வாழ்வை அர்ப்பணித்து தலைசிறந்த கடல் வாணிபத் திலகமாகத் திகழ்ந்த சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் எமதூர் கீழக்கரையில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் ஆவார்.

இவர் இயற்பெயர் ‘. ஷெய்கு அப்துல் காதர் என்பதுதான் சீதக்காதியாய் மருவி யிருக்கிறது. இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன்சேதுபதி இவரின் நெருங்கிய நண்பர். கிழவன் சேதுபதிக்குச் சீதக்காதி அமைச்சர்போன்று விளங்கினார்.சீதக்காதிக்கு மதிப்பளிக்கும் வகையில் சேதுபதுகளுக்கேயுரிய விஜயரகுநாத என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளார் கிழவன் சேதுபதி. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக அனைத்து தரப்பு மக்களிடம் அன்பாக திகழ்ந்தவர்seethakkathi

அவர்காலத்தில் மிகப்பெரும் பஞ்சமொன்று வந்தது. அதில் ஏராளமானோர் உண்ணஉணவின்றி மடிந்தனர். விலைவாசி உச்சக்கட்டத்தினை அடைந்தது. அத்தகைய பஞ்ச காலத்தில் ஏழை எளியோருக்கு எவவிதத் தடையும் இல்லாமல் உணவு வழங்கி உதவினார் சீதக்காதி. இதனை,
ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்

கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்

ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு

மார்தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே

-என்ற படிக்காசுப்புலவரின் பாடல் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

இத்தகைய சிறப்புமிக்க சீதக்காதி அவர்களின் பெயரில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதநாயகனாக நடிக்கும் 25வது படம் ‘சீதக்காதி’ என அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.keelakaraitimes.com

மறைந்த வள்ளல் சீதக்காதி அவர்கள் மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கான மனங்களை ஈர்த்தவர். எனவே அவர் பெயரில் சினிமாவாக தயாரிக்கும் போது பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படும் எனவே கதை ,திரைக்கதை அமைக்கும் போது மிக கவனமாக காட்சிகளை சீதக்காதி என்ற பெயருக்கு புகழ் சேர்ப்பது போன்று அமைப்பது அவசியம் மேலும் சீதக்காதி அவர்களின் புகழுக்கு குறைவில்லாமல் திரைக்கதை அமைவது கவனத்தில் கொள்ள வேண்டியது படக்குழுவினரின் பொறுப்பாகும்.  www.keelakaraitimes.com

என்பதை கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பில் வேண்டுகோளாக வைக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

சீதக்காதி குறித்த ஆய்வு கட்டுரை …..

கீழக்கரைக்கு புகழ் சேர்த்த “வரலாற்றில் வாழும் வள்ளல் பெருமான் சீதக்காதி ” ( காலம்; கி.பி 1650 -1698)

Comments

comments

One comment

  1. அஸ்ஸலாமு அழைக்கும்,

    முதலாவதாக, இந்த செய்தியை நான் நாளிதழில் படிக்கும் பொழுது, சீதக்காதி என்பது கீழக்கரை சீதக்கதியை குறிக்காமல், ஏதோ ஒரு நடிகரின் (சீதக்காதி) வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதாகவே அறிந்தேன். இதனை நான் ஹமீது யாசின் காகா அவர்களிடமும் சொன்னேன். மொஹிதீன் இபுராஹீம் காகா அந்த படம் நமது ஊர் சீமான் சீதக்காதியை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் என்று தவறாக நினைத்துள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *