ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

sdpi044 sdpi555 sdpi945 sdpiராமநாதபுரத்தில் பாஜகவினர் சமூக அமைதியை கெடுக்கும் விதமாக செயல்படுவதாகவும் அதற்கு  கண்டனம் தெரிவித்தும்  அவர்களை கைது செய்ய கோரியும் மேலும் ராமநாதபுரம் தங்கப்பா நகர் மதரசா மீது கற்கள் வீசி தாக்கியவர்கள்   மீது நடவடிக்கை எடுக்க கோரியும் எஸ் டிபி ஐ சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ் டி பிஐ கிழக்கு மாவட்ட தலைவர் அப்பாஸ் ஆலிம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் முகம்மது இஸ்ஹாக் வரவேற்றார். இதில் எஸ் டி பிஐ மாநில தலைவர் தெஹலான் பாகவி ,காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்

எஸ் டி பி ஐ மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி ,காங்கிரஸ் நகர் தலைவர் கோபி, திருப்புல்லாணி வட்டார தலைவர் சேது பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர் , நகர் தலைவர் சகுபர் சாதிக் நன்றி கூறினார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *