கீழக்கரை அருகே கைராத்துல் ஜலாலியா பள்ளி சார்பில் மோர்குளம் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்டம்

ka9 ka955

கீழக்கரை அருகேயுள்ள M.மோர்க்குளம் கிராமத்தில் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் 28-09-2017 வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது. தொடக்கவிழாவில் பள்ளியின் தாளாளர் அல்ஹாஜ் பேராசிரியர் டாக்டர். B.J.சாதிக் M.Sc, Phd, DSc அவர்கள். தலைமை வகிக்க கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் தலைவ. அல்ஹாஜ் ப.அ. சேகு அபுபக்கர் அவர்கள், நிர்வாகஸ்தர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், காரியகமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

பள்ளித் தலைமையாசிரியர் (பொறுப்பு) ஜனாப் N.செளகர் சாதிக் அலி M.Sc, B.Ed, M.Phil., அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். உடன் M.மோர்குளம் ஜமாத் தலைவர் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர் முகாமில் மசூதி தூய்மைப்படுத்துதல், ஊருணி சீரமைத்தல் மற்றும் தெருக்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றுதல், யோகா பயிற்சி, டெங்கு விழிப்புணர்வு தூய்மை இந்தியா திட்டம், இரத்ததான விழிப்புணர்வு, மூலிகையின் பயன்கள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முகாம் நிறைவு விழாவில் கிழக்குத் தெரு ஜமாத் தலைவர் அல்ஹாஜ் ப.அ. சேகு அபுபக்கர் அவர்கள் தலைமை ஏற்க தாளாளர் அல்ஹாஜ் பேராசிரியர் டாக்டர். B.J.சாதிக் M.Sc, Phd, DSc., அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். NSS மாவட்ட திட்ட அலுவலர் திரு K.ரவி M.Com, M.Ed., அவர்கள்

தலைமையாசிரியர் ஜனாப் A.முகம்மது மீரா M.Com, M.Ed, M.Phil., அவர்களும் முன்னாள் திட்ட அலுவலர்கள் M.செய்யது அபுதாஹிர் M.A, B.Ed, M.Phil., அவர்களும் A.செய்யது அலி M.A, M.Ed, M.Phil., அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். திட்ட அலுவலர் V.கண்ணன் முகாம் அறிக்கையினை வாசித்தார். முடிவில் M.மோர்க்குளம் ஜமாத்தலைவர் ஜனாப் அபுபக்கர் அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *