கீழக்கரையில் ரோட்டரி சார்பில் உணவு பாதுகாப்பு கருத்தரங்கம்

rt43 rtn rtn04 rtn55 rtn554இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ரோட்டரி சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.இதில் ரோட்டரி சங்க செயலாளர் தர்மராஜ்,பொருளாளர் சுப்பிரமணியன்,பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன்,டாக்டர் ராசீக்தீன்,எபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ரோட்டரி துணை ஆளுநரும்,மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியுமான ஜெகதீஸ் சந்திரபோஸ் அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுவது,சுட்ட கோழி கறிகளை உண்பது,போதை வஸ்துகள்,புகையிலை போன்றவைகளால் புற்றுநோய் உருவாகும் என்றார்.

அதே போல் பான்பராக்,சாந்தி பாக்கு,சைனி போன்ற பொருட்கள் விற்பனை செய்வது மற்றும் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் எங்களுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு
94440 42322 புகார் தெரிவிக்கலாம் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *