விடாமுயற்சியின் சொந்தக்காரர் நந்தகுமார்.ஐ.ஏ.எஸ்! மாணவர்களுக்கு ஒரு முன் மாதிரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்!

2014 பிளஸ்2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருடன் மாவட்ட ஆட்சியர் K. நந்தகுமார்
2014 பிளஸ்2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருடன் மாவட்ட ஆட்சியர் K. நந்தகுமார்

தற்பொழுது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவராக இருக்கும் கே.நந்தகுமாரின் வாழ்க்கை இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

லாரி டிரைவருக்கு மகனாக பிறந்து  நாமக்கல் அரசாங்க பள்ளியில் தமிழ் வழியாக பிளஸ்2 பயின்று 1016 மார்க்குகள் பெற்று 7 வருடங்களுக்கு முன்பு 2007 ல் இதே நாள் மே 14ம் தேதி ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 30 வது  ரேங்கிலும் , தமிழகத்தில் முதலாவதாகவும்  வெற்றி பெற்று சாதனை புரிந்ததின் பின்னணியில் ஒரு கடின உழைப்பு இருக்கிறது.

விவசாயி ஆக இருந்து சூழ்நிலை காரணமாக லாரி டிரைவராக மாறிய  எம்.கண்ணப்பனுக்கும் , கே.லட்சுமிக்கும் 1982, ஜுன் 7ம் தேதி மகனாக பிறந்தார். லாரி டிரைவராக இருந்த தந்தை  கண்ணப்பனின்  வருமானம் தனது  இருமகன்களின் படிப்பு செலவிற்கும்  வீட்டில் தையல் வேலை செய்து வரும் வருமானத்தில் தாய் லட்சுமி தனது வீடு செலவையும் கவனித்துக் கொண்டார்கள்.

படிக்கும் காலத்தில்  கடினமாக பயிலும் மாணவன் என்றும், பள்ளி நேரம்  போக காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் டியூஷன் படிப்பார் பிறகு நள்ளிரவு வரை வீட்டிலும் படிப்பார் அதனால் விளையாடிற்கே நேரமில்லை,  கிரிக்கெட்  விளையாடுவதை விரும்பிய  போதிலும்  படிப்பின் ஆர்வம் காரணமாக வார இறுதியில் ஒரு மணி நேரம் தான் விளையாடுவர்  என்றும் அவர் தாயார் கூறி உள்ளார்.

பிளஸ்2 படிப்பிற்கு பிறகு பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் இஞ்சினியரிங் முடித்த மாணவர் நந்த குமார்  கோயமுத்தூரில்  ஒரு  தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். பகலில் வேலை இரவில்  படிப்பு என்று கடினமாக உழைத்தும் வேலை பாலுவின் காரணமாக எங்கே தனது  ஐஏஎஸ் கனவிற்கு தடை வந்துவிடுமோ  என்று  நினைத்து  வேலையை துறந்து முழு மூச்சாக தனது ஐஏஎஸ் முயற்ச்சிக்கு உழைத்தார்.

இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவருக்கு ஐஏஎஸ் ஆபிசராக வீண்டும் என்று தான் கனவாக இருந்தது. ஹாஸ்டலில் இருக்கும் போது அடிக்கடி ஊருக்கு வருவது இல்லை , சினிமா பார்ப்பது இல்லை , குறைந்த அளவு நண்பர்களே இருந்தனர்.

யுபிஎஸ்சி தேர்வில்  முதல் முயற்சியில்  தோல்வி அடைந்த போதிலும்  இரண்டாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 350வது இடத்தைப் பிடித்தார்.இதன் பலனாக ரயில்வேயில் வேலை கிடைத்தது.தனது கனவாக ஐஏஎஸ் இருந்த போதிலும் குடும்ப பொருளாதார சூழ் நிலை காரணமாக தன் தந்தைக்கு தனது தம்பி அரவிந்த் குமாரின்  படிப்பிற்கு  உதவவும் ரயில்வே பணியில் சேர்ந்தார். அங்கும் பகலில் பணி இரவில் படிப்பு என்று கடினமாக உழைத்து தனது ஐஏஎஸ் கனவை நனவாக்க உழைத்துக் கொண்டு இருந்தார்,

தனது மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியாக தனது கனவு பரீட்சையை 2006ல் எழுதினர், 2007  மே 16ம் தேதி தேர்வு முடிவு வந்த பொழுது அவருக்கு பாரம் குறைந்தது போல இருந்தது அவரின் பெற்றோருக்கு மிகப் பெரிய  பெருமையாக  இருந்தது. ஆம் தமிழ் மொழியில் எழுதிய அந்த தேர்வில் அகில இந்திய அளவில் 30 வது இடத்திலும்  தமிழகத்தில் முதலாவதாகவும்  வந்திருந்தார்.

அப்போது திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷிஷ் வச்சானி  கலெக்டர்  நந்தகுமார் பெற்றோருடன்
அப்போது திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷிஷ் வச்சானி கலெக்டர் நந்தகுமார் பெற்றோருடன்

நந்தகுமார் தன் தாயிடம் நான் பிரபலமனவனாக இருப்பேன் என்று சொல்லுவார் ,  தான் வெற்றி பெற்ற மே 14ம் தேதி செய்தியை தனது தாய் லட்சுமிக்கு தெரிவித்த போது அதை நம்பவில்லை. விளையாட்டுக்கு சொல்வதாக நினைத்தார்.பிறகு செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெற்றோர் தங்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். காலையில் வேலைக்கு செல்ல தயாராக  இருந்த கண்ணப்பனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அப்போது திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷிஷ் வச்சானி  இல்லம் தேடி வந்து நந்த குமார் தமிழகத்தில் முதலாவதாக வந்த இன்பச் செய்தியை அவர்களுக்கு தெரிவித்தார்.

இந்த இமாலய வெற்றியை பெற்ற நந்தகுமார் இது தனக்கு நம்ப முடியாத நிகழ்வு என்று கூறிய போதிலும் தன்னுடைய இரண்டாவது  முயற்சியில் வாங்கிய ரேங்கு இதற்கு உத்வேகமாக அமைத்தது என்றும் இதன் பின்னணியில் நண்பர்களும் பெற்றோரும் இருந்தனர்  என்றார். தானும் தன்னுடைய நண்பர்கள் ஐந்து பேரும் கூட்டாக செய்த  கடின உழைப்பின்  பலன் தான் இது என்றார்.

தமிழின் முலம்  ஐஏஎஸ் எழுதிய நந்தகுமார்  தமிழ்  இலக்கியத்தையும்  பூகோளத்தையும்  தனது விருப்ப பாடமாக எடுத்து இருந்தார். அவர் மேலும் கூறுகையில் தமிழ் வழிக் கல்வியில்  பயின்ற தமக்கு தமிழ் மூலம்  ஐஏஎஸ்  எழுதுவது விருப்பமாக இருந்தது என்றார்.

தனது வாழ்க்கையின் வெற்றிக்கு தன்னுடைய தந்தையே காரணம் என்றும் அவர் தனக்கு தந்தையாக மட்டும் இல்லாமல் நண்பனாகவும் இருந்தார் என்றும் அவர் வேலை நிமித்தமாக இந்திய முழுவதும் சென்று  பல தரப்பட்ட மக்களிடம் பழகி உள்ளதாலும் என்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்ல உரிமை அளித்திருந்தார் என்றார்.

சாதாரண நிலையில் இருந்து தனது கடின உழைப்பின் மூலம் தற்பொழுது நமது மாவட்ட கலெக்டராக உயர்ந்து  நிற்கும் நமது மாவட்ட கலெக்டர் நந்தகுமாரின் வாழ்க்கை   நமது மாணவ  செல்வங்களுக்கு ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமில்லை

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் K.நந்தகுமாரின் இளமைகால போட்டோக்கள் :

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *