மாநில அளவிலான கலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு

rmd dis

மாநில அளவிலான கலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா; அலுவலகத்தில் இன்று (30.05.2017) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவா;.ச.நடராஜன்,இ.ஆ.ப., அவா;களை, 28.05.2017 அன்று மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற கலைப்பண்பாட்டுத் துறை தமிழ்நாடு ஜவகா; சிறுவா; மன்ற மாணவ, மாணவியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஜவகர்; சிறுவர் மன்றம் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவித்திடும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோடைகாலத்தை பயனுள்ளதாக செலவிடுவதற்கும், 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்;களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்கவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பரதநாட்டியம், குரலிசை (வாய்ப்பாட்டு) ஓவியம், கைவினை, நாட்டுப்புற நடனம் மற்றும் சிலம்பம் ஆகிய கலைகளை மாநில அளவிலான கோடைக்கால கலை பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 23.02.2017 அன்று இராமநாதபுரம் அரசு இசைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைப்போட்டி மதுரையில் 28.05.2017 அன்று நடைபெற்றது.

மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் இராமநாதபுரம் கலைப்பண்பாட்டுத் துறை தமிழ்நாடு ஜவகர்; சிறுவர் மன்றம் சார்பாக எல்.ஆகாஷ் (கிராமிய நடனம்), எம்.எஸ்.ஹாரி ணி (குரலிசை), எஸ்.சஹானா (பரதநாட்டியம்), ஆர்.அஸ்வின் (ஓவியம்) ஆகியோர்; பங்குபெற்றனர். எல்.ஆகாஷ் கிராமிய நடனத்தில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று ரூ.5000ஃ-க்கான காசோலை, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வென்றார்

மாநில அளவில் நடைபெற்ற கலைப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியார்கள் மற்றும் பரிசினை வென்ற எல்.ஆகாஷ் ஆகியோர்; இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவா; முனைவா;.ச.நடராஜன்,இ.ஆ.ப., அவர்களை நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்றனா;.

இந்நிகழ்வின் போது ஜவகர்; சிறுவர்;மன்ற திட்ட அலுவலர் கலைவளாமணி மு.லோகசுப்பிரமணியன் உடனிருந்தார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *