பொங்கலை முன்னிட்டு இராமநாதபுரம் பெமினா ஷாப்பிங் மால் நடத்திய கோலப்போட்டி.

sho955

shoppi95

shopping

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இராமநாதபுரம் பெமினா ஷாப்பிங் மால் சார்பாக மஹாலின் கீழ்தளத்தில் கோலப்போட்டி ஷாப்பிங் மாலின் மனித வள மேலாளர் இளமதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கோலப்போட்டியில் ஆர்வத்துடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

கோலப்போட்டியின் வெற்றியாளர்களை மாவட்ட உதவி கல்வி அலுவலர் தமிழரசி,பேராவூர் அரசினர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காளீஸ்வரி, திருவாடானை அரசினர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தமிழரசி ஆகியோர் தேர்வு செய்தனர்.

கோலப்போட்டியின் முதல் பரிசை புஷ்பா லதா,இரண்டாம் பரிசை இரம்யா,மூன்றாம் பரிசை தேன்மொழி ஆகியோர் பெற்றனர்.போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

இது சம்பந்தமான ஷாப்பிங் மாலின் மனித வள மேம்பாட்டு மேலாளர் இளமதி கூறுகையில் ஷாப்பிங் மாலின் மேலாண்மை இயக்குநர் திரு அபுபக்கர் அவர்கள் எப்போதுமே வாடிக்கையாளர்களை பெருமைபடுத்தும் விதமாகவும்,ஊக்குவிக்கும் விதமாகவும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கினைப்பு செய்வதில் வல்லவர் என்று கூறினார்.

ஷாப்பிங் மாலின் கணக்காளர் ஆசீக் அலி,முதல் தளம் மேலாளர் சிவ பிரகாஷ்,கண்காணிப்பாளர் சேக் பரீது ஆகியோர் கோலப்போட்டி ஒருங்கிணைப்பில் பங்கு பெற்றனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *