பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மோர் பந்தல்

pangu8585 panthu85 pangu
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மோர் பந்தல்
இன்று(09-04-17) நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மையத்தின் சார்பில் இராமநாதபுரம் தாலூகா அலுவலக நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் தொடர்ந்து 52 வது ஆண்டாக இராமநாதபுரம் தாசில்தார் திரு சுகுமாறன் தலைமையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே எம் தமிம்ராஜா சுமார்10000 பக்தர்களுக்கு பானக்கம் மற்றும் நீர்மோர் வழங்குவதையும் சுமார் 5000பக்தர்களுக்கு அன்னதானமாக உணவுப்பொட்டலங்கள் வழங்கவதையும் தொடங்கி வைத்ததை தொடர்ந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
இவ்விழாவில் மாவட்ட இணைச்செயலாளர் காசிநாததுரை தலைமையிடத்து துணை தாசில்தார் முருகேசன் மண்டல துணை தாசில்தார் முருகவேல் வட்டக்கிளை செயலாளர் பாலகுமார் துணை தலைவர் உதயகுமார் இணைச்சசெயலாளர் கலாதேவி சண்முகநாத பாண்டியன் விஜயகுமார் மற்றும் நாகலிங்கம் உள்ளிட்ட ஏராளமான அலுவலர்களும் கலந்து கொண்டனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *