resan

கீழக்கரை ரேசன் கார்டுதாரார்களுக்கு முக்கிய அறிவிப்பு

கீழக்கரை ரேசன் கார்டுதாரார்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு வழங்கும் பணியை, அக்., மாதம் முதல் துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது, 13 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், டேப்ளட் கருவி வழங்கப்பட்டு உள்ளது

அனைத்து ரேஷன் கடைகளுக்கும், ‘டேப்ளட்’ கருவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, ‘பாயின்ட் ஆப் சேல்’ என, பெயரிடப்பட்டு உள்ளது

கீழக்கரை தாலுகாவில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக பயனாளிகளிடம் தகவல் சேகரிக்கப்படுகிறது.

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் தமீம்ராசா கூறுகையில்,

thameem thas“ கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணி விரைவுபடுத்தபட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் தொடர்புடைய ரேஷன் கடையில் தங்களுடைய ஆதார் அட்டைகளை கொடுத்து ஸ்கேன் மூலம் பதிவு செய்யவேண்டும். அலைபேசி எண்ணையும் வழங்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்,” என்றார்.

‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு குறித்த விபரம் :–

● ரேஷன் கார்டுதாரர், குடும்ப உறுப்பினர்கள் விபரங்களை ஆதார் அட்டை ஆவணத்துடன் ரேஷன் ஊழியரிடம் வழங்க வேண்டும்; அதை, அவர் டேப்ளட் இயந்திரத்தில், ‘ஸ்கேன்’ செய்து விட்டு, ரேஷன் கார்டுதாரரிடம் திரும்ப வழங்குவார்
ரேஷன் கார்டுதாரரிடம் மொபைல் எண்ணும் கேட்டு வாங்கப்படும்

● ரேஷன் கடைகளில், செப்., வரை, ஆதார் விவரமும், மொபைல் எண்ணும் வாங்கப்படும்

● ரேஷன் கடையில், ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார் விவரம், உணவுத் துறை அலுவலகத்தின், ‘மெயின் சர்வருக்கு’ சென்று விடும்

● ஆதார் விவரத்தின் அடிப்படையில், ‘கிரெடிட்,
டெபிட் கார்டு’ வடிவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடப்படும். அந்த கார்டில், தமிழக அரசின் முத்திரை இடம்பெறும்; குடும்பத் தலைவர் புகைப்படம் இடம் பெறவும் வாய்ப்புள்ளது

● ரேஷன் கடை வாயிலாக, மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வினியோகம் நடக்கும்

● கார்டுதாரர், ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது, ஸ்மார்ட் ரேஷன் கார்டை வழங்கினால், ஊழியர் அதை, பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்தில் ஸ்கேன் செய்த பின், ‘பில்’ போடுவார்.

அந்த விவரம், உடனே கார்டுதாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் செல்லும்; உணவுத் துறை சர்வரிலும்
பதிவாகும்.இதன் மூலம், ரேஷன் கடைகளில் முறைகேடு குறைய வாய்ப்பு உள்ளது.

Comments

comments

One comment

  1. அருமையான திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *