ரமலான் மாத சிறப்பை உணர்வோமா … கட்டுரை. எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம்

ரமலான் மாத சிறப்பை உணர்வோமா … கட்டுரை. எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம்.தாளாளர், இஸ்லாமியா பள்ளிகள், கீழக்கரை

நன்மைகள் நிறைந்த இந்த சிறப்பான மாதம், பாவமன்னிப்பு பெறும் பாக்கியமிக்க மாதம், மனிதனை சீர்படுத்தும் மகத்தான மாதம், நம் உள்ளங்களை நெறி படுத்தும் உன்னதமான மாதம், இறையச்சத்தை அதிகரிக்கும் வலிமையான மாதம். இப்படி எண்ணற்ற சிறப்புகள் கொண்ட இந்த சீர்மிகு மாதத்தை அலட்சியம் செய்வதோடு அல்லாமல் பொழுதுபோக்கு மிக்க திருவிழா சீசனாக நாம் கடைபிடித்து வருகிறோமோ என்று தோன்றுகிறது

எத்தனை கோர விபத்துகளை நம் கண் முன்னே கண்டாலும், நோன்பு காலங்களில் இரவில் சுற்றுவது ஒரு கட்டாய கடமை என்று இளைஞர்கள் கருதுகிறார்கள்! அதுவும் போட்டி போட்டுக்கொண்டு படுவேகமாக இரவில் காதை பிளக்கும் சத்தத்துடன் தெருவில் வலம் வரும் வாலிபர்களையும் அவர்களுக்கு விலையுயர்ந்த வாகனங்களை வாங்கி கொடுத்து தெருவில் தறிக்கெட்டு சுத்த அனுமதிக்கும் பெற்றோர்களையும் இறைவன் தான் பாதுகாக்க வேண்டும்.

கீழக்கரையில் அதே போன்று பசியோடு இருந்து நோன்பு வைக்க வேண்டிய நாம் வேறு எந்த மாதத்திலும் இல்லாதளவு வகை வகையான உணவுகளை வயிறு புடைக்க திண்று ஒரு உணவு திருவிழா மாதமாக கொண்டாடி வருகிறோம்!
நோன்பு ஆரம்பித்த மறுநாளே பெருநாள் துணி எடுக்க ஜவுளிக்கடைகளில் குவியும் நம் மக்களை பார்த்தாலே தெரியும்

நோன்பு மாதத்தின் உண்மையான மகத்துவத்தை நாம் அறிந்தும் அலட்சியத்துடன் வாழ்ந்து வருகிறோம். நமது பிள்ளைகளுக்கு உரிய உறிவுரைகள் வழங்காமல் அவர்கள் செய்யும் பாவத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறோம் என்பதை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து நமது வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்கையாக அமைக்க இந்த புனித மாதத்தை பயன்படுத்தி பயன்பெறுவோமாக.⁠⁠⁠⁠

எந்த நோக்கத்திற்காக இறைவன் நோன்பை நமக்கு கடமையாக்கி இருக்கிறானோ அந்த நோக்கத்தையும், பலனையும் நாம் பெறும் பாக்கியசாலியாக இறைவனை பிரார்த்திப்போம்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *