கீழக்கரையில் மழை பெய்தும் அதிகளவில் கடலில் கலக்கும் அவலம் ! நகராட்சி மழை நீர் சேகரிப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

kadal-kali kaddal kadal9566
கீழக்கரையில் மழை பெய்தும் அதிகளவில் கடலில் கலக்கும் அவலம் ! நகராட்சி மழை நீர் சேகரிப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் கீழக்கரையில் சராசரிக்கு அதிகமான அளவில் கடலில் கலந்து வீணாகிறது

முன்பெல்லாம் வீட்டின் நடுப் பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்ததிருப்பார்கள் நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழை நீரும் முற்றத்துக்குள் வந்து கொட்டும். அப்படி வந்து கொட்டும் நீரை பெரிய பித்தளை அண்டாக்களை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு வேடு கட்டி பிடித்து சேமித்து வைக்கப்படும். பின்னர் சேமிக்கப்பட்ட நீரை தேவைப்படும் போது எடுத்து சுடவைத்து அருந்துவது பழக்கத்தில் இருந்து வந்தது இப்போதெல்லாம் இப்பழக்கம் வெகுவாக குறைந்தே விட்டது.

தங்களுக்கு தேவையான நீரை அகழியில் பிடித்தது போக மேல்கொண்டு மிஞ்சும் மழை நீரை வீணடிக்காமல் தங்களது வீட்டின் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்திருந்தனர். இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டட கலையினால் சிறு துளி தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டு வந்தது
ஆனால் காலப்போக்கி இடப்பற்றாக்குறையினால் வீடுகள் அமைக்கும் முறை மாறி விட்டது ஒரே ஆறுதல் பெரும்பாலான வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வீட்டுக்குள் இருக்கும் கிணற்றுக்குள் விழும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . அதே போல கீழக்கரையில் நிலத்தடி நீர் ஆதரத்திற்கு உறுதுணையாக இருப்பது கழிவு நீர் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்துள்ளது ஒரு காரணம் ஆகும்

ஆனால் இது மட்டும் போதாது கீழக்கரை தற்போது பெரும்பாலான மண் தரைகள் மூடப்ப்பட்டு பேவர் பிளாக் சாலையாகவும் சிமெண்ட் சாலையாகவும் உருவெடுத்து உள்ளது இதனால் நீரை உறிஞ்சும் அளவு குறைந்து முன்பைகாட்டிலும் பெருமளவில் கடலில் மழை நீர் கலக்கிறது கடலில் கலக்கும் மழை நீரை சேகரித்க புதிய திட்டங்களை கீழக்கரை நகராட்சி உருவாக்கம் செய்ய வேண்டும் .அதோடு குளங்கள் மற்றும் நீர் கால்வாய்களை உருவாக்கி மழைநீரை சேமித்து குடிநீரை தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *