பிளஸ்-2 தேர்வு முடிவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாணவி மாநிலத்தில் முதலிடம்

பிளஸ்2  மாநிலத்தில் மாணவி சுசாந்திதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.75 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில், 1193 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

2ம் இடத்தைப் பிடித்த தருமபுரி மாணவி அலமேலு 1,192 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.3ம் இடத்தை 2 மாணவர்கள் பிடித்துள்ளனர். செங்கல்பட்டு பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி நித்யாவும், நாமக்கல் க்ரீன்பார்க் பள்ளி மாணவன் துளசிராஜனும் 1,191 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தில் உள்ளனர்.

பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 பேர் எழுதினர். 3 லட்சத்து 80 ஆயிரத்து 288 மாணவர்களும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 829 மாணவிகளும் தேர்வு எழுதினர். ‌பள்ளி மாணவர்களைத் தவிர 53 ஆயிரத்து 629 தனித் தேர்வர்கள் இந்த பொதுத் தேர்வில் பங்கேற்றனர்.தேர்வு எழுதியவர்களில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.6 சதவீதமாகவும், பெண்கள் 93.4 சதவீதமும், ஆண்கள் 87.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

இதில், நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்:

கணிதப் பாடத்தில் – 3,882

இயற்பியல் பாடத்தில் – 2,710

வேதியியல் பாடத்தில் – 1,693

உயிரியல் பாடத்தில் – 652

கணினி அறிவியல் பாடத்தில் – 993

தாவரவியல் பாடத்தில் – 15

வணிகவியல் பாடத்தில் – 2,581

கணக்கு பதிவியல் – 2,403

வணிக கணிதம் – 605

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள …

www.tnresults.nic.in,

www.dge1.tn.nic.in,

www.dge2.tn.nic.in,

www.dge3.tn.nic.in இணையதளங்களைப் பார்க்கலாம்.

படம் நன்றி : புதிய தலைமுறை

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *