துபாயில் கீழக்கரையை சேர்ந்தோர் பிக்னிக் நிகழ்ச்சி

துபாயில் கீழக்கரையை சேர்ந்தோர் பிக்னிக் நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கீழக்கரையை சேர்ந்தோர் பிக்னிக் நிகழ்ச்சி நடைபெற்றது துபாயில் உள்ள சபீல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீழக்கரையை சேர்ந்த‌ 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

துபாயில் முதல் முறையாக கீழக்கரையை சேர்ந்தோர் கூட்டாக பங்கேற்ற பிக்னிக் நிகழ்ச்சி என நிகழ்ச்சியில் பங்கேற்றனர் தெரிவித்தனர்.
இதில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரேபியா ஹோல்டிங் துணை தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லா, லேண்ட் மார் குழு மேலாளர் மஹ்ரூப், ஸியாஜ் ஜெனரல் டிரேடிங் கீழை ஜமீல், வக்கீல் ஹமீது சுல்தான்,வஜ்வுதீன்,கீழை நீயுஸ் அப்துல் ரஹ்மான்,  மைபா காமில் உள்ளிட்டோர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நஜீம் மரிக்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஹமீது யாசின் நிகழ்ச்சி குறித்து விளக்கினார், நசீருதீன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹமீது யாசின், நசீருதீன்,நஜீம் மரிக்கா, பரக்கத் அலி உள்ளிட்டோருடன் அசார் ,ஹாரீஸ் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.  அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கீழக்கரைடைம்ஸ் மற்றும் கீழை நியூஸ் ஊடக ஆதரவை வழங்கியிருந்தனர்

வெஸ்டர்ன் ஆட்டோ சி இ ஓ கமால், உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *