“பாம்பன் பாலம்” என் வாழ்வின் ஒரு அங்கம் – முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருக்கம்

jawahirulla jawahi33 jawa

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், “ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வலியுறுத்துவேன்” என்று கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கார் மூலம் மண்டபம் வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மண்டபத்தில் சிறப்பு ரயிலில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்தார். பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில், 5 நிமிடம் ரயில் நின்றவுடன் பாலத்தையும், கடலையும் பார்த்து ரசித்தார். பாம்பன் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்தார். ரெயில்வே பொது மேலாளர் ராஜேஷ்மிஸ்ரா அவரை வரவேற்று அழைத்து சென்றார்.

நிகழ்ச்சிக்கு பாம்பன் ஊராட்சி தலைவர் பேட்ரிக் முன்னிலை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், விஞ்ஞானி ராஜன் ஆகியோர் பேசினர்.

ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ பேசியதாவது,

தற்போது சென்னையிலிருந்த ராமேஸ்வரம் வரும் இரு ரயில்களும் மக்களுக்கு வசதியான நேரத்தில் வருவதில்லை. எனவே காலை 7 மணி அளவில் வந்து சேரும் வகையில் புதிதாக ஒரு ரயில் பாம்பன் விரைவு வண்டி என்ற பெயரில் இயங்க வேண்டும்
-இப்பகுதியில் மீனவர்களின வசதிக்காக ரயில்களில் மீனுக்காக தனி சரக்கு பொட்டி இணைக்கப்பட வேண்டும்
-ராமேஸ்வரம் கோவை ரயில் தினமும் இயக்கப்பட வேண்டும்
-பாம்பன் ரயில் பாலத்திற்கு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற வேண்டும்
உள்ளிட்டவைகள் குறித்த் பேசினார்.

pamban 100 apjபின்னர் விழாவை தொடங்கி வைத்து டாக்டர் அப்துல் கலாம் பேசியதாவது:–

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலத்துக்கு சிறப்பு ரயில் மூலம் நண்பர்கள் மூலம் வந்தேன். அது ஒரு பரவசமான அனுபவம். அப்போது கடல் ஏற்படுத்திய ஓசையும், இனிமையான கடல் காற்றும் அமைதியான தென்றல் போல் வீசியதை உணர்ந்தேன்.

”நூறு ஆண்டுகளாக, மனித மனங்களை இணைக்கும் பாம்பன் பாலம், என் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்குகிறது.நான் பள்ளியில் பயிலும்போதும், கல்லூரியில் பயிலும் போதும் பல நூறுமுறை இந்த பாம்பன் பாலத்தை ரயிலில் கடந்து சென்றிருக்கின்றேன். 1914ல் இப்பாலம் போடப்பட்ட பின்னர் தான் வர்த்தகம், சுற்றுலா மேம்பட்டுள்ளது. 103 வயது வரை வாழ்ந்த எனது தகப்பனாரும் 97 வயதான என் அண்ணனும் இதில் பயணம் செய்துள்ளார்.

ராமேஸ்வரம் நான் பிறந்த ஊர் என்றாலும், பாம்பன் எனக்கு பிடித்த ஊர். பாம்பன் என்னுடைய வாழ்வில் ஓர் அங்கம். இங்கு சுற்றத்தார்கள் வாழ்ந்தார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள்., உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று நூறு ஆண்டுகளுக்கு முன், ராமேஸ்வரத்தை இணைத்த இப்பாலத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் கடந்து வந்ததால், மனித மனங்களை இணைத்துள்ளது மக்களை, மதங்களை, மனிதத்தை இணைப்பது போல இந்த தீவை இணைத்தது கோடிக்கணக்கான மக்களின் மனதை நெகிழச்செய்துள்ளது. இது இன்னும் பல கோடி ஆண்டு நீடித்து நிலைக்க வேண்டும். இந்தியாவில் கடல் மீது போடப்பட்ட பாலம் இதுதான்.

கடலில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் நாட்டின் இன்ஜினியரிங் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக தெரிவித்தார்.. கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் நாட்டின் இன்ஜினியரிங் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பாம்பனில் 58 கி.மீ.,க்கு மேல் சூறாவளி காற்று வீசினால், பாலத்தில் உள்ள தானியங்கி ‘சிக்னல்’ மூலம், ரயில் போக்குவரத்தை நிறுத்தும் வசதி உள்ளது; இது அறிவியல் வளர்ச்சியின் அதிசயம். மேலும், கடந்த ஆண்டு ஜன., 14ல், பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை, ஏழே நாள்களில் சரி செய்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கிய, தென்னக ரயில்வே அதிகாரிகளின் சாதனையை மறக்க முடியாது.

pambanபாம்பன் பாலம் இந்தியாவையும், இந்த தீவையும் இணைத்து நூறாண்டாகிறது. இப்பாலம் கட்டிய பின்பு இங்கிருந்து தனுஷ்கோடி சென்று அங்கிருந்து இலங்கைக்கு செல்ல வழியாக அமைந்தது. பாலம் தொல்நுட்பத்தோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே துருப்பிடிப்பதில் 2ம் இடம் வகிக்கும் இந்த பகுதியில் அமைந்துள்ள இப்பாலத்தை நல்ல முறையில் பராமரித்து வருவதற்கு தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உறக்கத்தில் வருவதில்லை கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. கனவாக இருந்தது நனவாக நடந்து வருகிறது என்றார்.

பூமி சூரியனை 365 நாள் சுற்றினால் ஓரு வருடம் ஆகின்றது. அது போல 100 முறை சூரியனை சுற்றிவர ஆகும் காலம் நூறாண்டுகள் ஆகும். இந்த நூறாண்டுகள் காலம் பாம்பன் பாலத்தை புயலிலும், சூறாவளியிலும், கடல் சீற்றத்திலும் பாதுகாத்து வரும் தெற்கு ரயில்வே துறையை பாராட்டுகின்றேன்.

முன்னதாக அவர் பேசும்போது நான் விளக்காக இருப்பேன், நான் படகாக இருப்பேன், நான் ஏணியாக இருப்பேன், அடுத்தவரை துன்புறுத்த மாட்டேன், மனநிறைவோடு வாழ்வேன் என்று கூறி அதனை பொதுமக்கள் அனைவரும் திரும்ப கூறும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் ராமேஸ்வரம்–சென்னை ரயிலுக்கு ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்ட வேண்டும். அதுபோலவே ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் மீனவர்கள் மீன்களை கொண்டு செல்வதற்காக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும் என நான் தெற்கு ரயில்வேக்கு, ரயில்வே அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கின்றேன்,இது கண்டிப்பாக நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.”  என்றார்.

முடிவில், ரெயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி நன்றி கூறினார். பிறகு, அப்துல் கலாம் ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றார். பொந்தம்புளி அருகே ரூ.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கூடுதல் கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். விழாவில், நேசக்கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, பாம்பன் முன்னாள் ஊராட்சித் தலைவர் முகமது அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *