வரும் அக் 25ல் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு.

invi inv34
வரும் 25 அக் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடத்தை எதிர் வரும் 25ம்தேதி மாலை 6 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேதகு இந்திர பானர்ஜி திறந்து வைக்கின்றார்.

இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி மேதகு வைத்தியநாதன்,இராமநாதபுரம் மாவட்ட தலைமை நீதிபதி மேதகு அனில்குமார்,இராமநாதபுரம் மாவட்ட செசன்சு நீதிமன்ற நீதிபதி மேதகு கயல் விழி,தமிழக சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சண்முகம்,தமிழக தகவல் தொடர்பு அமைச்சர் மணிகண்டன்,இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன்,மாவட்ட D I G பிரதீப் குமார்,இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீரா,முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஐ சேகர்,செயலாளர் முருகேசன்,ஆகியோர் உள்பட மாவட்ட வழக்கறிஞர்கள்,அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

இந்த நீதிமன்றம் முதுகுளத்தூரில் அமைவதின் மூலம் பரமக்குடி நீதிமன்றத்தில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குக்குக்காக இப்பகுதி மக்கள் பரமக்குடி செல்ல வேண்டியது இல்லை.இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை நாடி தீர்வு காணலாம்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *