கீழக்கரை அருகே ஊரணியை தூர் வார வலியுறுத்தல்

kilakarai uoorani

கீழக்கரை அருகே உள்ள அலவாக்கரைவாடி ஊரணியை தூர் வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை அருகே உள்ள அலவாக்கரைவாடி ஊரணி பல ஆண்டுகளாக து£ர்வாரமல் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து உள்ளது, இந்த ஊரணியை து£ர்வாரினால் அலவாக்கரைவாடி, மீனாட்சிபுரம், முத்துசாமிபுரம், புதுகிழக்குத்தெரு, இடிஞ்சகல் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள், ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த ஊரணியை து£ர்வாரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பஞ்சநாதன் கூறுகையில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் து£ர்வாரப்பட்ட ஊரணியில் தண்ணீர் நிறைந்து இப்பகுதி மக்கள் குழிப்பதற்கும், கால்நடைகள் குடிப்பதற்கும் பயன் படுத்தப்பட்டது, இப்போது தொடர்ந்து து£ர்வாராமல் இருப்பதால் மணல் நிறைந்து மழை நீரை கூட தேக்க முடியால் உள்ளது, ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த ஊரணியை து£ர்வார உத்தர விடவேண்டும் என்றார்.

இது போன்று மாவட்டத்தில் பல்வேறு ஊரணிகளை தூர் வார கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *