தோட்டங்களில் விதிகளை மீறி மண் அள்ளுவதால் விரைவில் கீழக்கரை மற்றும் கிராமங்களில் கடும் தண்ணீர் பஞ்சம்

தோட்டங்களில் விதிகளை மீறி மண் அள்ளுவதா விரைவில் கீழக்கரை மற்றும் கிராமங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் என முன்னாள் கவுன்சிலர் குற்றச்சாட்டு உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் எம் எம் கே துரை என்ற ஜமால் வெளியிட்டுள்ள செய்தியில்jamall 944
கீழக்கரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சமீப காலமாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. கிணற்று நீர் வற்றிப்போய் கிணற்றுக்குள் 20 அடிக்கு மேல் (போர்) துளை போட்டு நீர் எடுக்கப்படுகின்றது. இதுவும் எவ்வளவு ஆழம் போகும், எத்துணை நாட்கள் தாங்கும் என்று தெரியவில்லை.

மழை இல்லை அதனால் கிணற்றில் தண்ணீர் இல்லை என்று அப்பாவியாக நம் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த திடீர் தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் கீழக்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் “சலங்கை மணல்” என்று கூறப்படும் மணலை அரசு அனுமதித்த 3.5 அடி ஆழத்தை விட அளவுக்கு அதிகமாக 30,40 அடிக்கு மேல் தோண்டி அள்ளியதே காரணம்.

எத்துணை ஆண்டுகள் மழை பொய்த்தாலும் கடல் நீரை இயற்கையாக உப்பை நீக்கி நம் வீட்டு கிணறுகளுக்கு ஊற்றுகள் மூலம் நல்ல நீரை இலவசமாக விநியோகித்துக் கொண்டிருக்கும் இந்த “சலங்கை மணல்” மேடுகள்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் எந்த எதிர்ப்பும் இன்றி கடுமையாக மணல் வலம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த மணல் குவாரிகளுக்கு சமீபத்தில் அரசு மீண்டும் அனுமதி கொடுத்துள்ளது.

இதனால் ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்ட அதே நபர்கள் பினாமிகள் மூலம் தற்பொழுது முன்பைவிட அளவுக்கு அதிகமாக JCB இயந்திரங்களை பயன்படுத்தி அசுரவேகத்தில் மணல் மேடுகளை சூரையாடிவருகின்றனர்.

ஒரு நாளைக்கு ஒரு குவாரியில் இருந்து மட்டும் 100 டிராக்டர்களில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கீழக்கரை மனிதர்கள் வாழத் தகுதி இல்லாத பாலைவனமாக மாறிவிடும்.

இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளோம்.
மேலும் இது சம்பந்தமாக அனைத்து ஜமாத்துகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *