கீழக்கரை அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது. தப்பி ஓடியவர்களை போலீஸ் தேடுகிறது

pol988 po098 poliகீழக்கரை அருகே உள்ள பாரதி நகர் விவேகானந்தபுரம் தனியார் தோட்டத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4பேர்களை கீழக்கரை மற்றும் ஏர்வாடி போலீசார் இணைந்து கைது செய்து அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் ஐந்து செல்போன்கள் மற்றும் இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கீழக்கரை அருகே உள்ள பாரதி நகர் விவேகானந்தபுரம் தனியார் தோட்டத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக கீழக்கரை டி.எஸ்.பி. ரவிபிரசாத்க்கு(பொறுப்பு) கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் திலகவதி (கீழக்கரை) ராஜேஸ்வரி (ஏர்வாடி) சிறப்பு எஸ்.ஐ சரவணன் மற்றும் ரகசிய போலீசார் உள்ளிட்ட காவலர்கள் அந்த தோட்டத்தை சுற்றி வளைத்து அதில் பதுங்கி இருந்த சின்னமாயாகுளம் சன்யாசி மகன் ராஜபாண்டி(40), சிங்கம் புளியம்பட்டி ராமமூர்த்தி மகன் மணிகண்டன்(32), து£ர்வாரன்வலசை வேலு மகன் பாலமுருகன், திருப்பாச்சி பாண்டி மகன் கனித்குமார்(18), ஆகியோரை கைது செய்தனர், இவர்கள் பதுக்கி வைத்திருந்த அறிவால், கத்தி, போன்ற ஆயுதங்களையும், 5 செல்போன்களையும், இவர்கள் பயன் படுத்திய இரண்டு டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்,

இவர்களுடன் உடன் தங்கி இருந்த கமுதியை சேர்ந்த மந்திரி என்ற முத்து இருளான்டி, மாரி, அமுனி, முனீஸ், புலி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர் இவர்களை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது மதுரை, கூடல்புது£ர், அவனியாபுரம், கமுதி, கீழக்கரை உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளது என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 4 பேர்களையும் கூடல் புது£ர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *