தீக்குளிப்பேன் ! கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசம்!

nagaratchiகீழக்கரை நகராட்சி கூட்டம், தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில், கமிஷனர் ஐயூப் கான் முன்னிலையில் நடந்தது.

நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் 6 லட்ச ரூபாயில், வழிகாட்டு பலகைகள், அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நகராட்சிக்கு கூடுதலாக அலுவலக மேலாளர் (நிலை 4), நகராட்சி பொறியாளர் நிலை (2), வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 67 பணியிடங்கள் தோற்றுவிக்க நகராட்சி நிர்வாக கமிஷனருக்கு கருத்துரு அனுப்ப தீர்மானம் நிறைவேற்றினர்.
வாடகை கட்டடத்தில் இயங்கும், நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கு நகராட்சிக்கு சொந்தமான பழைய உரக்கிடங்கில், நகராட்சி நிர்வாக கமிஷனரின் அனுமதி பெற்று இடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக 18 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இபுராகிம், நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு பகுதி…..

Haja-Najumudeen 21

ஹாஜா நஜ்முதீன்:- நகர சபையின் வரவு-செலவு குறித்த பட்ஜெட் கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நகராட்சி சொத்துக்களை தனியார் ஆக்கிரமிப்பதை தடுத்து மீட்க வேண்டும். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கூட்டத்தில் தீக்குளிப்பேன்.

கழிவுநீர் அகற்றும் பம்பு செட் டுகளுக்கான டீசல் திருடப் படுவதால் மோட்டார்கள் இயங்காமல் முக்கிய வீதிக ளில் கழிவுநீர் தேங்கி சுகா தாரக்கேடு ஏற்படுகிறது. இத னால் போக்குவரத்தும் பாதிக் கப்பட்டு வருகிறது.

Sithick-Aliசித்திக் அலி:- பழுதடைந்த கழிவுநீர் அகற்றும் மோட்டார் களை உடனே பழுது நீக்க வேண்டும்.

ஆணையாளர் ஐயூப் கான்:-

ayubkhan comisner

நகரசபைகூட்டத்தில் பட்ஜெட் தாக் கல் செய்வது வழக்கம் இல் லாத ஒன்று. எனவே அது குறித்து பரிசீலிக்கப்படும். நக ராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக் கிரமிப்பவர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக் கப்படும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகராட்சி நிர்வாகத்தை தரம் உயர்த்த அலுவலகம், என்ஜினீயரிங் பிரிவு, பொது சுகாதாரம், நகர் அமைப்பு ஆகிய பிரிவுக ளில் கூடுதல் பணி இடங் கள் உருவாக்கப்படும். கொசு ஒழிப்பு பணிக்காக தினக் கூலி அடிப்படையில் பணியா ளர்கள் நியமிக்கப்படுவார் கள்.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது. ஓவர்சீயர் அறிவழகன், மேலாளர் நாகநாதன் மற்றும்  கவுன்சி லர்கள் சுரேஷ், ரபியுதீன், முகைதீன் காதர் சாகிப், ரமேஷ், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

comments

One comment

  1. கீழக்கரை அலி பாட்சா

    கடற்கரையிலிருந்து பழைய மீன் கடை வழியாக முஸ்லீம் பஜார் வரை செல்லும் நகரின் பிரதான வீதிகளில் ஒன்றான இதற்கு பழைய குத்பாப் பள்ளி சாலை என பெயரிட வேண்டும். மேற்படி ஜமாஅத்தை சார்ந்த தலைவி, உதவி தலைவர் உட்பட ஆறு மக்கள் பிரதிநிதிகளும் கடும் முயற்சி எடுக்க வேண்டும்.அரிய சந்தர்ப்பம் நழுவ விட்டு விடக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *