ராமநாதபுரம் மாவட்டத்தில் சதக் கல்லூரி சார்பில் கல்வி வழிகாட்டி முகாம்

s9 s044 sisss ss44

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய +2மாணவர்களுக்கான (“வெற்றி நமதே”); கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். திரு. கே. முனுசாமி தலைமையிலும் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீ ன்கல்லூரி நெறியாளர்; முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.
மின்னியல் மற்றும் தொடர்பியல்; துறைப் பேராசிரியர் முத்துவேல் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையின் மூலம் +2 என்பது உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் படிப்பு அதில் இறை நம்பிக்கையுடன் கூடிய கல்வியை விடாமுயற்சியுடன் கற்றால் எதையும் சாதிக்கலாம். எனவே ஒவ்வொரு மாணவரும் இறை நம்பிக்கையுடன் இந்த +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த பொறியியல் துறையை தேர்வு செய்து சாதனையாளராக உருவாக வேண்டுமென வாழ்த்தினார். மேலும் கல்லூரியிpல் உள்ள பொறியியல் பாடப்பிரிவுகளின் சிறப்பும்இ அதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு பற்றியும் எடுத்துரைத்தார்.
கணினி பயன்பாட்டியல் துறைப் பேராசிரியர் தீபா கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித்தொகைகள் பெறுவது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கிய இயற்பியல் பிரிவு ஆசிரியர்; குமார் இ அரசு உயர்நிலைப் பள்ளி இரட்டையுரணிஇ வேதியியல் பிரிவு ஆசிரியர் பிரபாகரன்; அரசு மேல்நிலைப் பள்ளி பனைக்குளம் கணித பிரிவு ஆசிரியர்; விஜயபாபு அரசு மேல்நிலைப் பள்ளிஇ இரட்டையுரணி; ஆகியோர் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நாளைய வெற்றியாளர்களாக விளங்க வேண்டும் என்று ஆலோசனைகளை விளக்கங்களுடன் எடுத்துக் கூறினர். மேலும் சாதனையாளர்கள் உருவாவது அவர்களுடைய விடாமுயற்சியால்தான் நீங்கள் நாளைய சாதனை படைக்கும் பொறியாளாராக உருவாவதற்கு விடாமுயறடசியுடன் படித்து வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி தங்கச்சிமடம்இ மண்டபம் கேம்ப் இ இராமேஸ்வரம் இ உச்சிப்புளிஇ வேதாளைஇ பாம்பன் மற்றும் வேர்க்கோடு ளு.வு. ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளை சார்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இந்த வெற்றி நமதே நிகழ்ச்சியின் மூலம் +2 தேர்வினை எவ்வாறு எழுதுவது மற்றும் அதிக மதிப்பெண்கள் எப்படி பெறுவது போன்ற வழிமுறைகளை கேட்டு பயனடைந்தனர் மருத்துவ படிப்பு படிப்பதற்கு நீட் தேர்வு மூலம் அதிக மதிப்பெண் பெற கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி ரீட்ச் அகாடமி மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் கலந்து கொண்டு மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
இயந்திர பொறியியல் துறைப் பேராசிரியர் சுதாகரன் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன சேக் யூசுப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.
அதே போன்று பரமக்குடியிலும் நிகழ்ச்சி நடைபெற்றது

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *