மாற்றி யோசியுங்கள்! மாறுதல் நிச்சயம் வரும் !

தேவைகளை உணர்த்து சற்று மாற்றி யோசித்து வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டி வரும் இருவரின் கதை இது.

காட்சி 1:

mulamதிருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் எனும் இடத்தில் புளியன் மரத்தடியில் இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் முலாம்பழம் பழச்சாறு போடும் கடை வைத்திருந்தார். பழச்சாறு கடைகள் அனைத்தும் குடியிருப்புகள் அருகிலும் ஜனநடமாட்டம் உள்ள பகுதியிலும் இருந்தது. ஆனால், இளவயது நபர் வைத்திருந்த தள்ளுவண்டி கடை அருகே குடியிருப்புகள் எதுவும் இல்லை.இங்கு பழச்சாறு கடை வைத்திருக்கிறீர்கள். வியாபாரம் நடக்கிறதா?” என்று கேட்ட போது. அதற்கு, “நன்றாக நடக்கிறது” என்று கூறிய அவர் மேலும் கூறியதாவது

“ராசிபுரம் அருகே வையப்பமலை எனது சொந்த ஊர். எனது பெயர் ராஜகோபால். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விவசாயம் செய்கிறேன். பகல் வேளையில் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க முடிவு செய்து, பழச்சாறு கடை வைத்துள்ளேன். தள்ளுவண்டி கடை வைத்துள்ள இடத்தில் இருந்து சில அடி துாரத்தில் சாலையின் நடுவே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வருவோர் வேகத்தடையை கடக்க வாகனங்களை மெதுவாக ஓட்டுவர். அப்போது எனது கடை கண்ணில் படும். கோடை வெயிலும் அதிகமாக இருப்பதால் வாகனங்களை நிறுத்தி பழரசம் சாப்பிடுகின்றனர்.

நாளொன்றுக்கு ஆயிரம் முலாம்பழ பழரசம் விற்பனை செய்கிறேன். கடைகளில் விற்பனை செய்யும் அதே நேரத்தில், ரூ.15 என்ற மலிவு விலையில் விற்பனை செய்கிறேன். முலாம்பழ பழரசம் மிக்ஸி மூலம் தயார் செய்யப்படுகிறது. அதற்கான மின்சாரத்திற்கு பேட்டரி பயன்படுத்தவில்லை. காரணம், அதிக செலவு பிடிக்கும். அதேவேளையில் விவசாய நிலத்திற்கு மருந்து அடிக்க பயன்படும் இயந்திரத்தின் மோட்டாரை எடுத்து கிரைண்டர் பெட்டியில் பொருத்தியுள்ளேன். இவற்றை இயக்க பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 150-க்கு பெட்ரோல் நிரப்பினால் ஆயிரம் பழரசம் தயார் செய்ய முடியும்” என்று கூறினார்

காட்சி 2:

solarவிழுப்புரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ், புதுச்சேரி கருவடிகுப்பம் முத்தமிழ் வீதியில் வசிக்கிறார். கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் தள்ளுவண்டி ஜூஸ் மற்றும் குளிர்பானக் கடையை அமைத்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: ஜூஸ் போடுவதற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் எடுக்க இயலும், தனியார் நிறுவனம் அமைத்து தந்துள்ளது. 3 சோலார் பேனல்கள் தள்ளுவண்டி மேலே பொருத்தப்பட்டுள்ளது. தள்ளுவண்டியில் குளிர்சாதன பெட்டி, மின்விளக்கு, மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரி ஆகியவை இணைத்து தள்ளுவண்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு ரூ.1.92 லட்சம் ஆகும்.

இரவில் சூரிய ஒளி மின் சக்தியால் ஒளிரும் விளக்குகளை கொண்டு கடையை நடத்துகிறேன். மேலும் மிக்சியும் சோலார் மின்சாரம் மூலமே இயங்குகிறது. கடையின் செயல்பாட்டை ஒரு மாதத்துக்கு தனியார் நிறுவனம் கண்காணிக்கும். இதுவரை தனியார் நிறுவனம் என்னிடம் சோலார் பொருத்தியதற்கான கட்டணத்தை பெறவில்லை. வியாபாரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து அடுத்த செயல்பாடு இருக்கும். மே மாதம் முதல்தான் இம்முறையில் கடையை நடத்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

படித்து பட்டம் பெற்ற பலர் சரியான வேலை கிடைக்கவில்லை. சுய தொழில் ஆரம்பித்து நஷ்டம் என புலம்புவோர் மத்தியில் தங்களது சமயோகித அறிவால், பழச்சாறு கடை அமைத்து லாபம் ஈட்டும் ராமதாசும் ராஜகோபாலும் பாராட்டுகுரியவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நன்றி : படம் & செய்தி சாரம்: தி இந்து

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *