காணாமல் போன மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது – மலேசிய பிரதமர் அறிவிப்பு

16 நாட்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானம் MH 370  இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்திய பெருங்கடலில் இருப்பதாக செயற்கை கோள் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது என்றும், எனவே கடலில் விமானம் விழுந்திருக்கும் என்று பிரிட்டிஷ் செயற்கை கோள் நிறுவனம் மற்றும் பிரிட்டனின் விமான விபத்தை கண்டுபிடிக்கும் நிறுவனத்தின் நிபுணர்கள் முடிவுக்கு வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் இருந்து  பீஜிங் நோக்கி, 239 பயணிகளுடன்MAL சென்ற மலேசிய விமானம், கடந்த 8ம் தேதி அதிகாலையில் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

முதன் முதலில் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கைகோள் படம் பிடித்தது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென் மேற்கே சுமார் 2 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவில் அந்த பொருட்கள் மிதப்பது தெரியவந்தது. சீனா மற்றும் பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள்களும் அப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் பொருட்களை படம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற தவலை விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு விமானநிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போன விமானத்தில் இந்தியர்கள் 5 பேர் உட்பட 230 பயணிகள் சென்றது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *