சட்ட கல்விக்கு வழிகாட்டும் கீழக்கரையை சேர்ந்த ஹைகோர்ட் பெண் வழக்கறிஞர்!

advocate 1
ஜசீமத் மரியம் ஆயிஷா
sirajudeen3
தந்தை சிராஜுதீன்

கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த ஹமீதியா துவக்கப்பள்ளியின் முன்னாள் தாளாளர் ஹபீபுல்லா சிராஜீதீன் ,ஆயிஷத் மஃபீதா தம்பதியரின் மகளான ஜசீமத் மரியம் ஆயிஷா , ‘அகில இந்தியா பார் கௌன்சில் சங்கம்’ சேரந்தவர். 2010ல் வழக்கறிஞர் படிப்பை நிறைவு செய்த இவர் தற்போது சென்னையில் பிரபல வழக்கறிஞர் திருமதி மைதிலியிடம் பணியாற்றி வருகிறார். வரி விதிப்பு சட்டத்தில் (Law of Taxation), மறைமுக வரி(Indirect Taxes) சேர்ந்த சுங்கத்தீர்வை(Customs Duty), மத்திய உற்பத்தி வரி (Central Excise Duty), சேவை வரி (Service Tax) ஆகியவற்றில் சிறப்பித்து,  தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

கீழக்கரை அபீபுள்ளா சாகிப் கல்கண்டு குடும்பத்தையும், கொட்டியா உசெய்ன் அவர்களின் குடும்பத்தையும் சேர்ந்த இவர் கீழக்கரையிலிருந்து சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றும் முதல் பெண்மணி ஆவார்.

இது குறித்து ஜசீமத் மரியம் ஆயிஷா  தரப்பில் கூறியதாவது,
பெண்கள் சட்டகல்வி கற்று பணியாற்றுவது என்பது கடினமானது பாதுகாப்பு குறைவு என்றெல்லாம் சிலரால் கருத்துகள் சொல்லப்படுவதுண்டும்.வழக்கறிஞர் என்ற முறையில் சொல்கிறேன் அந்த கருத்துகளில் உண்மையில்லை.

மேலும் நமது பகுதியை சேர்ந்த பெண்களுக்கு சட்டம் தொடர்பாக,அது போன்று மாணவிகள் சட்ட கல்வி பயில்வது தொடர்பான எவ்வித ஆலோசனைகள் தேவைப்பட்டாலும் ,  நான் உதவ தயாராக உள்ளேன்.

பெண்கள் கல்வி கற்பது மிக மிக அவசியம்.நான் வழக்கறிஞராக பணியாற்ற எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த எனது பெற்றோர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள்,ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் பெருமைபடும்படியாக எனது செயல்பாடுகள் அமையும் இன்ஷா அல்லா. எல்லா புகழும் இறைவனுக்கே…. என்றார்.

இது  குறித்து கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில்,

நமது பகுதியில் பெண்கள் கல்லூரி படிப்பை நிறைவு செய்தாலும்  பணிகளுக்கு செல்வதில்லை அதிலும் சட்டம் தொடர்பான கல்விக்கு பெண்கள் செல்வது அரிதாகும். நிச்சயமாக வரவேற்று பாரட்டபடவேண்டியவர் வழக்கறிஞர் ஜசீமத் மரியம் ஆய்ஷா  ஆவார். அதிலும் அவரது தந்தை சிராஜீதீன் மிகவும் பாராட்டுக்குறியவர்.தனது மகளை வழக்கறிஞராக படிக்க வைத்து பணியாற்ற வைக்க நாம் வாழும் சமூக நிலைமையில் எத்தனை தடைகளை சந்தித்திருப்பார் என்று அவருக்கு மட்டும் தெரிந்திருக்கும் .

இவரை போன்றவர்களை இஸ்லாமியா பள்ளிகள் சார்பில் ஊக்குவிக்கும் வகையிலும் மாணவிகளுக்கு இவர்களை பார்த்து ஊக்கம் ஏற்படும் வகையிலும் இவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தினோம்.ஏற்கெனவே நமதூரை சேர்ந்த முதல் சப் இன்ஸ்பெக்டர் அனசை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். இன்னும் அதிகமாக சாதனை பெண்கள் உருவாவதற்கு எடுத்துகாட்டாக திகழ கீழக்கரையின் முதல் பெண் வழக்கறிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

 

 

Comments

comments

4 comments

  1. உங்கள் பணியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை !!! தங்களின் இப்பணி பல சிறந்த மேதைகளையும் வள்ளுனர்களையும் உருவாக்க துவாக்கள் !! கல்விப்பணியாற்றும் தங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் !!

  2. Ahamed Hussain muaadh

    Proud of you!!!MashaAllah..

  3. I want to know some information about law education pls kindly help me sir/madam. now im going to join LLB in andhra state college then when i complete LLB that time any problem for registering in tamilnadu barcouncil sir/madam. I want to know the information about it sir/madam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *