கீழக்கரை நகர் முழுவதும் இன்று 23-09-17 திடீர் மின் தடை

கீழக்கரையில் மாதாந்திரப் பணி நேரங்களில் மின்தடை காலம் நேரம் போன்ற விபரங்கள் இரு நாட்களுக்கு முன்பாகவே நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிப்பு வரும்.ஆனால் இன்று காலை 9.30 மணிக்கு கீழக்கரை நகர் முழுதும் மின்தடை உள்ளது

 

இது குறித்து N.M.T.தெருவைச் சேர்ந்த மீரான் அவர்கள் கூறுகையில் ”

nmt st

காலை முதல் தற்போது 02.00 மணி ஆகியும் மின்சாரம் இல்லை.மின்தடை நேரங்களை விட கூடுதலாக மின்சாரம் இல்லாததால் பேட்டரி கரண்ட்டும் தடைபட்டுள்ளதால் சிறு குழந்தைகள் வைத்துக் கொண்டு மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளோம்.
முன் கூட்டியே தகவல் இருந்திருந்தால், மதுரைக்கு செல்லும் வேலையை முடித்திருக்கலாம்.மின் ஊழியர்களிடம் கேட்டதற்கு கீழக்கரைக்கு காவானூரில் இருந்து மின்சாரம் வருகிறது. அங்கு மெயின் டிரான்ஸ்பார்மரில் பழுது என்கின்றனர்.மூன்று மணி நேரம் கழித்து போன் செய்தால்  போனை எடுக்க மறுக்கின்றனர் எப்படி தகவல் அறிந்து கொள்வது. லீவு எடுத்து கொண்டு சொந்த ஊருக்கு ஆவலுடன் வந்தால் மின்சாரம் இல்லாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது . “என்றார்.

Comments

comments

One comment

  1. இதில் வரும் அனைத்து செய்திகளும் வாட்ஸ்அபு குழுவில் கிடைக்குமா…..குழு இருந்தால் இணைக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *