கீழக்கரையில் ஒருவர் வெட்டப்பட்டு காயம் !
kasim888கீழக்கரை புது கிழக்குத்தெருவை சேர்ந்தவர் காசிம் இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தில் வேப்ப மரக்கிளைகளால் அவ்வப்போது மின்சார கேபிளில் உரசி தீப்பொறி ஏற்படும் அபாயத்தை சுட்டிக்காட்டி இடத்தின் அனுமதி பெற்று கிளைகளை வெட்டினாராம். இந்நிலையில் இவர் பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற போது இவரது காது பகுதியில்  வெட்டப்பட்டு  காயமடைந்து ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காசிம் கூறியதாவது

மரக்கிளைகளால் மின்சார விபத்து ஏற்படும் என்ற நோக்கத்தில் நிலத்தின் உரிமையாளாரிடம் அனுமதி பெற்றுதான் கிளைகளை வெட்டினேன். இதற்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டை சேர்ந்தவர்கள் எங்கள் வீட்டுக்கு நிழல் தரும் கிளைகளை எப்படி வெட்டலாம் என்று பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்ற என் மீது கொலைவெறி தாக்குதல் நோக்கத்தில் என்னை வெட்டினர். இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து இது போன்ற அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *