கீழக்கரையில் திடீர் சூறை காற்று ! தனியார் கட்டிடத்தில் இருந்த கோபுரம் சாய்ந்தது

to44

Thanks.Dinakaran daily News


கீழக்கரையில் திடீர் சூறை காற்று ! தனியார் கட்டிடத்தில் இருந்த   கோபுரம் சாய்ந்தது
கீழக்கரையில்  திடீரென்று சூரைகாற்று வீசியது
இதில் புதிய பஸ் ஸடாண்டின் அருகில் தனியார் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த டவர் அஸ்திவாரத்துடன் சாய்ந்தது. பின்புறமாக சாய்ந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை

கீழக்கரையில் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும், இந்நிலையில் பஸ் ஸ்டாண்டு எதிரில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இரண்டாவது மாடியில் கம்யூனிகேசன் டவர் சுமார் 120அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது,

இந்த டவருக்கு அஸ்திவாரம் சரியாக போடாததால் இன்று 18/05/17 மாலை திடீரென்று வீசிய பயங்கர சூரைகாற்றில் டவர் அஸ்திவாரத்துடன் சாய்ந்தது கட்டடத்தின் பின்புறமாக சாய்ந்ததால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

திடீர் காற்றால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *