சவூதி அரேபியாவில் கீழக்கரையை சேர்ந்த வாலிபால் வீரர்கள் உள்ளடக்கிய அணி அறிமுக நிகழ்ச்சி

 

சவூதி அரேபியாவில் கீழக்கரையை சேர்ந்த வாலிபால் வீரர்கள் உள்ளடக்கிய அணி அறிமுக நிகழ்ச்சி

சவூதி அரேபியாவில் ஜித்தா நகரில்  Friends republic club என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநில விளையாட்டு வீரர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த வாரம் பதிவு செய்யப்பட்ட கிளப்பாக அதற்கான சின்னத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஹோட்டலில் நடைபெற்றது.கிரிக்கெட்,வாலிபால், கூடைப்ப்பந்து என பல்வேறு விளையாட்டு வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மலையாள செய்தி பத்திரிக்கையாளர் முசாபில் பங்கேற்றார். தலைவர் ஜான்சன் ,பொது செயலாளர் பிலிபர்ட் மாதிவ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த அணியில் கீழக்கரையை சேர்ந்த வாலிபால் விளையாட்டு இளைஞர் ஹமீது ராஜா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *