கீழக்கரை டூ சினிமா கனவுலகம் .. கட்டுரை (படங்கள்) . எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

mahmood nainaகட்டுரையாளர் . எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா
கிங் ஆக இருப்பதை விட கிங் மேக்கராக இருப்பதைதான் கீழக்கரை வாசிகள் பெரிதும் விரும்புவதை கடந்த கால வரலாறுகள் மூலம் அறிய முடியும், திரை உலகிற்கும் கீழக்கரைக்குமான தொடர்புகள் நெடும் வரலாற்றுப்பிண்ணனியை கொண்டது, 1970 களில் ஆவனா. மூனா. யாஸீன் காக்கா தமிழக திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியதை திரைத்துறையினர் இன்றும் நினை கூறுவது உண்டு, புரட்சித்தைலைவர் எம்.ஜி.ஆருக்கும் யாஸீன் காக்காவுக்கும் நெருக்கமான உறவு இருந்தது, எம்.ஜி.ஆர் சிவாஜி, பாலாஜி ஆகியோரின் திரைப்படங்களுக்கு நிதி உதவி செய்ததோடு மட்டுமின்றி அவர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்த உரிமையும் யாஸீன் காக்காவின் நிறுவணங்களுக்குதான் கிடைத்தது,

சேது பிலிம்ஸ், செம்பி பிலிம்ஸ் வச்சிர நாடு பிலிம்ஸ், வள் நாடு பிலிம்ஸ் என தமிழகத்தின் அணைத்து நகரங்களிலிலும் இவரது நிறுவணங்கள் செயல்பட்டு வந்தன. அதே போல சென்னையில் கிரசண்ட் மூவீஸ், கிரௌன் பிலிம்ஸ் , ராசி அண்ட் கோ போன்ற நிறுவணஙகளிலும் பங்குதாரராக இருந்தார். ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் திரைப்படத்தையும், மு.க.முத்து தயாரித்த பிள்ளையோ பிள்ளை போன்ற திரைப்படங்கள்ய்க்கு முதலீட்டராக இருந்தவர், பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு நிதி ஆதாரமாக திகழ்ந்தவர். சாண்டோ சின்னப்பத்தேவரிடம் மிக நெருக்கம் கொண்டவர,

அவர் தயாரித்த பெரும்பாலான திரைப்படஙகளுக்கும் முதலீடு செய்தவர். யாஸீன் காக்கா இல்லாமல் அந்த காலக்கட்டத்தில் கோடம்பாக்கத்தில் எந்த சினிமா தொடக்கமும் நடைபெறாதாம். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பெரும் பொருட் செலவில் தயாரான சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்து, ராஜேஸ் கண்னா நடித்த இந்தி திரைப்படமான ஹாத்தி மேரா சாத்தி என்ற திரைப்படத்திற்கு நிதி உதவி அளித்தவர், யாசீன் காக்காவின் பம்பாய் அலுவலகத்தில் வைத்துதான் ராஜேஷ் கன்னாவின் கால்சீட் பெறப்பட்டது என்ற செய்தியும் உண்டு. பின்பு இந்த படம் தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் நல்ல நேரம் என்ற பெயரில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை புரிந்தது.

வள்ளல் பி.எஸ்.ஏ ரஹ்மானும் திரை உலகில் முக்கியத்துவம் பெற்ற காலமும் இருந்தது, எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் இதயக்கனி திரைப்படஙகளுக்கு முதலீடு செய்தது மட்டுமின்றி அந்த படங்களின் வெளி நாடுகளில் நடந்த படப்பிடிப்புக்கு உதவியதாகவும் அறிய முடிகிறது. எம்.ஜி. ஆரின் பெரும் அன்புக்கு பாத்திரமாக பி.எஸ்.ஏ அவர்கள் திகழ்ந்தார்கள்.

அது போல அல்பா காதர் அவர்களும் பல படஙகள் தயாரித்து வெளிவர உதவியிருக்கிறார், குறிப்பாக பைரவி, ராஜரிஷி, மிருதங்க சக்கவர்த்தி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களின் பைரவி பிலிம்ஸ் தயாரித்த பல படஙகளுக்கு நிதி உதவி செய்திருக்கிறார்.

சதக் அப்துல் காதர் அவர்கள் உடன்குடி தாஹா தயாரித்த பல படஙகளுக்கு உதவி இருக்கிறார். குறிப்பாக அர்ஜூன் நடித்த அடிமை சங்கிலி படத்திற்கு நிதி உதவி செய்ததாக அறிய முடிகிறது.
சமீபத்தில் கீழக்கரையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அஜ்மல்கான் , விரைவில் வெளிவர இருக்கும் ஒளடதம் என்ற திரைப்படத்தை தயாரித்திருப்பதாக செய்திகள் வருகிறது. இப்படி திரைப்படம் வெளிவர காரணமாக இருக்கும் கீழக்கரையை சேர்ந்தவர்களில் கலைஞர்கள் இருக்கிறார்களா? என்றால் மிகவும் சொற்பமாகத்தான் இருப்பதாகத்தான் தெரிகிறது.
எத்தனை திறமைகள் இருப்பினும், வெள்ளித்திரையில் மக்கள் முன் தோன்றும் பொழுதுதான் அங்கீகாரம் கிடைக்கிறது.

1970 களில் செண்னையில் நாடக சபாக்கள் பிரபலமாய் இருந்த காலத்தில் கூவித்திரிந்த குயில்கள் என்ற பெயரில் ஒரு நாடக சபா கீழக்கரையை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது, இந்த நாடக குழுவில் கவிஞர் அப்துல் ஹக்கீம், கவிஞர் இன்குலாப், சாகுல் ஹமீது ( சி.ஐ.டி) போன்றவர்கள் இருந்தனர். சென்னையில் பல இடஙகளில இந்த குழுவால் நாடகங்கள் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த குழுவை சார்ந்த சிலரால் சுருளி ராஜன் , தேங்காய் சீனிவாசன் மற்றும் மனோரமா ஆகியோ நடிக்க எடுக்கப்பட்ட அவளுக்காக அழுதான் என்ற திரைப்படம் எடுப்பதற்கான முயற்சி நிதி நெருக்கடி காரணமாக தோல்வியில் முடிவடைந்தது.

கீழக்கரையை சார்ந்தவர்களில் கலைஞர்களாக குழந்தை நட்சத்திரம் ஹாஜா சரீப், முகைதீன் அப்துல் காதர் என்ற கலைமாமனி ராஜ் கிரன், கபடி விளையாட்டு வீரர் ஜின்னா போன்றவர்கள்….

பல்லாண்டுகளுக்கு முன் கீழக்கரை தொழிலதிபர்கள் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டனர் பிற்காலங்களில் பெரும்பாலானோர் அதிலிருந்து  முற்றிலுமாக ஒதுங்கி விட்டனர்

அதே சமயம் கீழக்கரையில் அப்போதிருந்து இப்போது வரை சினிமா உலகில் மின்னியும், பின்னியும் ,பின்னடைவை சந்தித்தும் உச்சம் தொட்டவர்களையும் ,சினிமாவில் நடித்தோம் என்ற பெயர் மட்டும் மிச்சம் இருப்ப்பவர்கள் குறித்தும்  குறித்து ஓர் அலசல்

 

நடிகர் ஹாஜா சரீப்haja sher

கீழக்கரை, வடக்குத்தெருவை சார்ந்தவர் , 1968 ஆம் ஆண்டு பிறந்தவர் இவரது தந்தை நூர் முகம்மது சென்னையில் துனிக்கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார், 1978 ஆம் ஆண்டு வாக்கில் கீழக்கரை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஹாஜா சரீப் சினிமா மீது இருந்த ஈர்ப்பு காரணமாக , படிப்பை துறந்து வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் சென்னைக்கு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. சென்னையில் தனது தந்தையின் நன்பர் மூலம் திரையுலக தொடர்பு ஏற்பட்டு , இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் உதவியால் 1979 ஆம் ஆண்டு பாக்கியராஜின் இயக்கத்தில் வெளிவந்த சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1980 முதல் 1986 வரை வெளிவந்த பெரும்பாலான திரைப்படஙகளில் குழந்தை நட்சத்திரமாகவும், காமெடி நடிகராகவும் நடித்து புகழுச்சிக்கு சென்ற இவர் பாக்கியராஜுடன் சேர்ந்து நடித்த அந்த ஏழு நாட்கள் திரைப்படம் வசூலில் சாதனை செய்தது, இந்த திரைப்படத்தில் ஹாஜா சரீபின் நடிப்பை பார்த்து அடுத்த கமலஹாசன் நீதான் என் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் ஹாஜா சரீபிடம் கூறினாராம்,

அந்த காலக்கட்டத்தில் வெளிவந்த சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன் , மோகன் , பாக்கியராஜ் ஆகிய அனைவரின் திரைப்படங்களில் ஹாஜா சரீப் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்று இருப்பார், 1980 களின் தொடக்க காலத்தில் வெளிவந்த நெஞ்சிலே துனிவிருந்தால், கல்வடியும் பூக்கள், ஆகாய கங்கை, பொறந்த வீடா புகுந்த வீடா, கோபுரங்கள் சாய்வதில்லை, சந்திப்பு, ரங்கா , மூன்று முகம் ஆகிய திரைப்படஙகள் குறிப்பிடதக்கது, விசுவின் இயக்கத்தில் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது பரவலாக பேசப்பட்டது, பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் திரைத் துறையில் 1986 க்கு பின பெரும் சரிவை சந்தித்தார், அதற்கான காரணம் அன்றைய காலக்கட்டத்தில் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடு என்றும் சொல்லப்பட்டது, பாக்கியராஜ் ஒருவர்தான் அவருக்கு தனது அனைத்து படங்களிலும் வாய்ப்பளித்து வந்தார், கடைசியாக அஜீத் நடித்த சிட்டிசண் படத்தில் கிளர்க்காக நடித்திருப்பார், அதற்கு பின் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. சில ஆண்டுகளாக ஏர்வாடி சந்தனகூடு விசேஷத்திலும் கூட நட்சத்திர நிகழ்ச்சி நடத்தி வந்தவர் , தற்பொழுது அதுபோன்ற நிகழ்ச்சிகளை வெளி நாடுகளில் நடத்தி வருகிறார். திரைத்துறையில் தொடக்கத்தில் வேகமாய் வளர்ந்த ஹாஜாசரீப் சில காலங்களில் சரிவை சந்தித்து, மீண்டும திரைவாணில் மின்ன முடியாத சூழ்லே தொடர்கிறது இன்றைய நிலை நாளை யார் அறிவார்… என்பதே உண்மை நிலை.

கலைமாமனி ராஜ்கிரண்

raj ki
1980 களின் இறுதியில் காதர் பாய் என்ற ராஜ்கிரனை தெரியாத வினியோகஸ்தர்கள் எவருமே இருக்க முடியாது, அவ்வளவு பிரபலம். சினிமா விநியோக வியாபாரத்தில், மினிமம் கியாரண்டி, ஏரியா வசூல், திரைப்பட உரிமம், மீடியம் பட்ஜட் படங்களின் வெற்றி வாய்ப்பை ஊகிப்பது என அனைத்து வித்தையும் அறிந்தவர். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தினை விநியோகஸ்தர்கள் வாங்க தயங்கியபோது, இந்த கான்செப்ட் நிச்சயம் வெற்றி பெரும் என விநியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கை விதைத்தவர்,இசைஞானி இளையராஜாவுடன் நெருக்கம் கொண்டவர், தான் தயாரித்த, இயக்கிய அனைத்து படங்களுக்கும் அவரையே இசையமைக்க வைத்து அருமையான பாடல்களை இடம் பெற் வைத்தார்.

1950 ஆம் ஆண்டு கீழக்கரையில் அத்தியிலை தெருவில் பிறந்த் முகைதீன் அப்துல் காதர் என்ற ராஜ்கிரன் திரையுலகில் தடம் பதித்த நிகழ்வுக்கு ஒரு பிண்ணி உண்டு, ஆரம்பத்தில் புரசைவாக்கத்தில் ஒரு துனிக்கடையில் பணி புரிந்த இவருக்கு நெருங்கிய தோழராக இருந்த கிழக்குத்தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (சி.ஐ.டி) அவர்களின் உதவியால் சென்னையில் கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த சதக் அன்சாரி மற்றும் அகபர் அலி ஆகியோரின் நிர்வாகத்தில் இருந்த க்ரௌன் மூவிஸில் சாதாரன பணியாளராக சேர்ந்து, அங்கு வேலை செய்த 20 வருடங்களில் படிப்படியாக முன்னேறி அந்த விநியோக நிறுவனத்தில் மேலாளர் பதவி வரை உயர்ந்தவர், தனது அனுபவித்தில் அனைத்து திரைத்துறை வியாபார நுட்பங்களையும் கற்றறிந்த பின் தனியாக விநியோகஸ்தர் தொழிலை தொடங்கினார். பின் தயாரிப்பாளராக அறிமுகமாகி 1988 வாக்கில் நடிகர் ராமராஜனை வைத்து என்னை பெத்த ராசா, ராசாவே உன்னை நம்பி என இரண்டு படங்களை தயாரித்தார், என்னைபெத்த ராசா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஆக்டிங்க் துறையில் தடம் பதித்தார்.

1991 ஆம் ஆண்டு தனது ரெட் சன் சினி ஆர்ட்ஸ் கம்பெனி தயாரித்த என் ராசாவின் மனசிலே… படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். வடிவேலு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த முதல் படமும் இதுதான்… மதுரையில் நடந்த படபிடிப்பில் ராஜ்கிரண் கலந்துகொண்டபோது அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக சென்னைக்கு வடிவேலுவை அழைத்து வந்து தனது அனைத்து படங்களிலும் வாய்ப்பளித்தார். தான் நடிக்க தொடங்கி 27 வருடங்களில் தான் தேர்ந்தெடுத்த 29 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

அதில் பாண்டவர் பூமி தவமாய் தவமிருந்து , சண்டைக்கோழி, மஞசப்பை, பவர்பாண்டி படங்கள் மூலம் தனது அற்புமான குணச்சித்திர நடிப்பை வழங்கி தமிழ் சினிமா வரலாற்று பங்கங்களில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் ராஜ்கிரன். அதுமட்டுமின்றி அரன்மைக்கிளி 2 படங்களை இயக்கியவர், திடீரென சரிவை சந்தித்து கானாமல் போய் 2001 ஆம் ஆண்டு பாலாவின் நந்தா படத்தில் படிக்கும் நடிக்கும் வரை வாழ்க்கையை கடன் , சொந்த வாழ்க்கையில் நிலைகுலைந்து போனார்.

நந்தா படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டு மீண்டும் சினிமா ஏணியில் ஏறி வெற்றிக்கோட்டையே தொட்டும் விட்டார்…

சொந்த வாழ்கையில் தனது முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து, தனது முதல் மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் பிரிந்து இரண்டாவது மனைவி மற்றும் பிள்ளையுடள் வாழ்ந்து வருகிறார். கம்பீரமான கேரக்டருக்கு பெயர் வாங்கிய ராஜ்கிரன், தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கியவர், மேலும், தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும், பிலிம் பேர் அவர்டும் வாங்கியவர்.
திரைப்பட துறையில் கூட ராஜ்கிரணுக்கு நல்ல பெயர் இருக்கின்றது.. சரியான நேரத்துக்கு வந்து டெடிக்கேஷனாக நடித்து கொடுப்பவர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கின்றார்…. திரைப்பட வினியோகஸ்தராக இருந்து , தயாரிப்பளாராக மாறி, இயக்குனராக பரிமளித்து, நாயகனாக ஜொலித்து எல்லவற்றிலும் ஜெயித்து, இடையில் சருக்கி, தன்னம்பிக்கையுடன் மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் வெற்றி படி ஏறி இருக்கும் ராஜ்கிரன்  கீழக்கரை காரர் என்று பெருமிதம் கொள்பவர்களும் உண்டு  விமர்சிப்பவர்களும்  உண்டு…

 

கபடி வீரர் ஜின்னாkabadi jinnah ktime33

1980 களில் கீழக்கரை பகுதியில் நடைபெறும் கபடி போட்டிகளில் கபடி ஜின்னா மிக பிரபலம், கபடி மட்டுமல்ல சிலம்பம் சுழற்றுவது போன்ற வீர விளையாட்டுகளிலும் இவர் ரெம்ப பேமஸ, அந்த காலக்கட்டத்தில் கீழக்கரை பகுதியில் நடக்கு கட்சி மாநாடுகள், மற்றும் பேரணிகளில் கபடி ஜின்னாவின் வீர விளையாட்டுக்கள் முக்கியத்துவம் பெறும்,

சினிமா வாய்ப்பு தேடி சென்னை சென்றவர், சரியான வாய்ப்பில்லாமல் ஸ்டண்ட் நடிகராக அரிதாரம் பூசினார், பாட்ஷா படத்தில் ரஜினியுடன் வரும் கோர்ட் அணிந்து வரும் பாடிகார்ட்களில் ஒருவராக் நடித்திருப்பார். படையப்பா படத்திலும் ரஜினியுடன் நண்பனாக வருவார் அரசியல் தலைவர் ராமதாசின் உதவியாளராக சில காலம் இருந்தார்  ,சில காலம் தொடர்ந்து நடித்தவர் தற்பொழுது சினிமாத்துறையில் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பசீர்basheer

கீழக்கரை தெற்குதெருவை சேர்ந்தவர் பசீர்  இவர் விஜய் சேதுபதி நடித்த சேதுபதி படத்தில் அரசியல்வாதியாக மற்றும் சிங்கம்2 என  சிறு வேடங்களில் நடித்து வருகிறார்

இன்னும் சிலர் குழந்தை நட்சத்திரமாக,மாடலாக வெகு குறைந்த அளவிலான கேரக்டர்களில் நடித்து தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பவர்களும் உண்டு….

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *