திருட்டு சம்பவத்தில் விரைவாக திருடியவர்களை பிடித்த கீழக்கரை இன்ஸ்பெக்டர் தலைமையிலான‌ போலீசார்

 

4e 4y
கீழக்கரை திருட்டு சம்பவத்தில் விரைவாக திருடியவர்களை பிடித்த கீழக்கரை இன்ஸ்பெக்டர் தலைமையிலான‌ போலீசார்
கீழக்கரையில் சின்னகடைத்தெருவில் உள்ள ஒருகடையை உடைத்து திருடிய இரண்டு சிறுவர்களை குறப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கீழக்கரை சின்னகடைத்தெருவில் உள்ள ஒரு ஸ்டேசனரி கடையில் நேற்று இரவு கடையை உடைத்து உள்ளே புகுந்து ரூபாய் 8 ஆயிரத்து 500யும், 4 செல்போன்களையும் யாரோ திருடி சென்று விட்டதாக அந்த கடையில் வேலை செய்யும் சர்மிளா என்ற பெண் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் திலகவதிins5555 மற்றும் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள்

si muniமுனியாண்டி, தங்கச்சாமி ஆகியோர் விசாரித்து வந்தனர்.

விசாரணையில் வீடியோ கடை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சின்னபாலைரேந்தல் கிராமத்தை சேர்ந்த ராமையா மகன் லட்சுமனன்(19), காஞ்சிரங்குடியை சேர்ந்த மலைராஜ் மகன் செல்வம்(16) என்ற இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் கடையை உடைத்து திருடியது தெரியவந்து மேலும் விசாரித்ததில் கடையில் திருடிய ரூபாய் 8ஆயிரத்து 500யும், 4 செல்போன்களையும் வீட்டின் அருகே புதைத்து வைத்திருந்ததை எடுத்து கொடுத்துள்ளனர், இவர்கள் இருவரையும் கீழக்கரை காவல்துறை எஸ்.ஐ செந்தில் முருகன் மேலும் விசாரித்து வருகின்றார்.

குற்றம் நடந்த சில மணி நேரங்களில் துரித நடவடிக்கை எடுத்த கீழக்கரை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *