வீடியோ: அபார திறனால் சர்வதேச அளவில் பாராட்டை பெற்று வரும் கீழக்கரை சிறுவன்

சற்று முன் செய்த செயலை மறந்து விடும் சூழ்நிலைக்கு ஆளாகும் இக்காலத்தில் பல்வேறு கட்டங்களில் தனது ஞாபக சக்தியை நிரூபித்து அனைவரையும் ஆச்சரியத்தில் முழ்கடிக்கிறார்  5000 ஆயிரம் ஆண்டுகள் வரை தேதி எண்ணை குறிப்பிட்டால் அடுத்த நொடி கிழமையை தெரிவிக்கிறார்.

சிறுவன்எஸ் முஹம்மது ஃபஹீம் கீழக்கரையை சேர்ந்த சாஹுல் ஹமீது மற்றூம் ஷமீமா தம்பதியினரின் மகனான இவர் தற்போது துபாயில் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்இவரது அரிய திறனை  அறிந்து  காட்சி ஊடகங்கள் இவரை அழைத்து இவரது திறனை  ஒளிபரப்பி வருவதினால் பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

முஹம்மது ஃபஹீம்மின் சாதனைகள் 5000 ஆயிரம் ஆண்டுகள் வரை தேதி எண்ணை குறிப்பிட்டால் அடுத்த நொடி கிழமையை தெரிவிக்கிறார்.

உலக நாடுகளின் கொடியை அடையாளம் கண்டு அந்த நாடுகளின் பெயரையும் தலைநகரையும் சொல்கிறார். ஒரே சமயத்தில் உலக நாடுகளின் அந்ததந்த நாடுகளில் கடிகார‌ நேரத்தை துல்லியமாக தெரிவிக்கிறார்.

நிறுவனங்கள் அறிமுகபடுத்தும் அனைத்து செல்போன் பெயரையும் , தயாரிப்பு தேதியையும் விவரிக்கிறார். எங்கெல்லாம் சென்றாரோ அதன் தேதியையும் நேரத்தையும் ஞாபத்தில் வைத்துள்ளார் பல்வேறு மொழிகளையும் கற்று வருகிறார்.

இவருடன் பழகும் மாணவர்கள்,நண்பர்கள்,ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட அனைவரின் பிறந்த நாளையும் ஞாபகத்தில் வைத்துள்ளார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *