கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் தமிழர் திருநாள் மற்றும் கலைப் பண்பாட்டு விழா

po994 pong933 pong994
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்மன் முகம்மது சதக்குத் தம்பி நினைவு தமிழ்மன்றம் சார்பாக 11.01.2018 அன்று காலை 10.30 மணியளவில் தமிழர் திருநாள் மற்றும் கலைப் பண்பாட்டு விழா கல்லூரி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் அவர்கள் தலைமை ஏற்றார். க‌ல்லூரி மாணவ மாணவியர்; அனைவரும் தமிழா;களின் பாரம்பரிய‌ உடையணிந்து பொங்கல் இட்டனர். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வாழ்க்கையைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில், வசந்த் டிவி, பொதிகை டிவி, விஜய் டிவி புகழ் காப்பியக் கவிஞரும், தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை க‌ல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் பாகை. இரா. கண்ணதாசன் அவர்கள் சிறப்பு நகைச்சுவை சொற்பொழிவு நிகழ்த்தினாh;. இவ்விழாவிற்கு முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர்; அல்ஹாஜ் னுச.து. முகம்மது ஜஹபர் மற்றும் முதல்வர் னுச.து. அப்பாஸ் முகைதீன் ஆகியோர்; வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக முதுகலை கணினியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைத்தலைவரும் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளருமான திரு. டீ. காரத்திக் அவர்கள் வரவேற்றார்;. தமிழர் திருநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களிடையே நாட்டுப் புறப்பாடல், பலகுரல் போட்டி, விவாதமேடை, மண்பாண்டங்களில் ஓவியம் வரைதல், உபயோகமற்ற பொருட்களை கொண்டு கலைநயமிக்க கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை கண்டு களித்தனர். இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் திரு. P. பாலமுருகன் அவர்கள் நன்றி கூறினார்;. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுகலை கணிதவியல் துறைத்தலைவர் திரு. து. ஜேசுதுரை, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் னுச. ஆ. ஆனந்த் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா; திரு. N. சுலைமான் மற்றும் பல்வேறு துறைச் சாh;ந்த பேராசிhpயா;கள் பலா; செய்திருந்தனர்

;. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர்;; அல்ஹாஜ் ளு.ஆ. யூசுப் செயலாளர் ஜனாபா ளு.ஆ.ர். ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *