கீழக்கரை – ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் வாகன தணிக்கை

hee hel999கீழக்கரை – ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் வாகன தணிக்கை
விபத்து மற்றும் குற்றச்செயல்களை கட்டுபட்டுத்தும் வகையில் தொடர்ச்சியாக‌ கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, எஸ் ஐ வசந்த் தலைமையிலான போலீசார் காஞ்சிரங்குடி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில் அதிவேகமாக வந்த வாகன ஓட்டிகள், அதிக பாரமேற்றி வந்த லாரி டிரைவர்கள், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வந்த வாகன ஓட்டிகள் என வாகன ஓட்டிகளுக்கு அபாரதம் விதித்து, எச்சரிக்கை செய்யப்பட்டது.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ‘ விபத்துக்களை குறைக்கும் வகையில், தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விபத்துக்கள் குறைந்து வருகிறது. மேலும், அதிவேகத்தில் வரும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்’ என்றனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *