டூவீலர் விபத்தில் கீழக்கரை இளைஞர் உயிரழப்பு

acc655 - Copy acc655 accc

கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் இ.சி.ஆர் சாலையில் ஏற்பட்ட டூவீலர் விபத்தில் கீழக்கரை முத்துச்சாமிபுரத்தை சேர்ந்தவர் பலி.

கீழக்கரை முத்துசாமி புரத்தை சேர்ந்த காளி மகன் ராஜேந்திரன்(35) இவர் கீழக்கரை தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார், இவருக்கு திருமணம் ஆகி ஆண் 1 பெண்1 என இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர்  இன்று மாலை ராமநாதபுரத்திற்கு டூவீலரில் சென்றார்.

கீழக்கரை&ராமநாதபுரம் செல்லும் இ.சி.ஆர் சாலையில் தோணிபாலம் அருகில் டூவீலரில் செல்லும் போது நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள மைல் கல்லில் மோதியதாக கூறப்படுகிறது, இந்நிலையில் கீழேவிழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே பலியானர், இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைபற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *