கீழக்கரை தொடர் மின் தடை ! நகர் எஸ்டிபிஐ மின் வாரிய அதிகாரியுடன் சந்தித்து புகார்

sdpi9555 sdpi944

கீழக்கரையில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் கீழக்கரையில் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் கீழக்கரை எஸ்டிபிஐ நகர்சார்பாக மின்சார வாரிய அதிகாரி பால்ராஜை ச‌ந்தித்து கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்கு மாதத்திற்கு 2 முறை மூன்று முறை அதிகார்ப்பூர்வமாக‌ காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளதாக குறித்து மின் வாரிய அதிகாரியிடம் புகாரளித்தனர்

இது குறித்து மின்வாரிய அதிகாரி பால்ராஜ் கீழக்கரைக்கு இரண்டு டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது ஒன்று பழுதடைந்து உள்ளதால் அதை சரிசெய்வதற்கு இன்று பரமக்குடியில் இருந்து மின்வாரிய அதிகாரி மற்றும் ஊழியர்கள் வந்து பளுவை சரிசெய்வதற்கு வருகின்றார்கள். விரைவில் சீர் செய்யப்படுமென தெரிவித்தார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *