கீழக்கரையில் வரும் பிப் 18ந்தேதி தாலுகா அலுவலக கட்டுமான பணி துவக்கம்

கீழக்கரையில் வரும் பிப் 18ந்தேதி தாலுகா அலுவலக கட்டுமான பணி துவக்கம்

கீழக்கரையில் தாலுகா அமைக்க வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக அரசியல் கட்சிகள் மற்றும் பல சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

கடந்த தி மு க ஆட்சியில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதை தொடந்து வந்த அ தி முக ஆட்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் இதனை செயல்படுத்த‌ அறிவிப்பை வெளியிட்டார்.

கீழக்கரையில் தாலுகா அலுவலகம் அமைய பல அரசியல் கட்சிகளுடன்,சமூக அமைப்புகளுடன் முன்னாள் நகர் மன்ற தலைவி ராவியத்துல் கதரியாவின் முயற்சியில் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது

taluk-land-fr44நிரந்தர‌ தாலுகா அலுவலகம் அமைய இப்பகுதி மக்கள் நலன் கருதி கீழக்கரை தொழில் அதிபர் செய்யது சலாவுதீன் இலவசமாக‌ கீழக்கரை இராமநாதபுரம் சாலையில் ஒதுக்கி கொடுத்தார்.

இந்நிலையில் இந்த அரசு கீழக்கரையில் தாலுகா அலுவலகம் அமைய சில மாதங்களுக்கு முன் இராமநாதபுரத்தில் நடந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிி நிதி அறிவிப்பு செய்தார்taluk land fr84930303

manikandan949இந்நிலையில் வரும் 18ம்தேதி காலை 10.30 மணியளவில் அமைச்சர் மணிகண்டன் கட்டுமான பணியை துவக்க உள்ளார்

17ந்தேதி என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது 18ந்தேதி என தெரிவிக்கப்பட்டிருப்பதால் தேதி மாற்றப்பட்டுள்ளது

 

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *